சென்னை, மே 10-- தமிழகத்துக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க உடனடியாக பரிசீலிப் பதாக முதல்வர் மு.க.ஸ்டாலி னிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
இது
தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
பிரதமர்
மோடியுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின்
தொலைபேசியில் உரையாடி னார். கரோனா பெருந் தொற்றை கட்டுப்படுத்துவதற் காக, புதிதாக பொறுப்பேற் றுள்ள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரினார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசும் துணை நிற்கும் என உறுதியளித்தார்.
தமிழகத்தின்
முக்கிய கோரிக்கையான ஆக்சிஜன் தொடர்பாகவும் முதல்வர் பேசினார். மாநிலத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலிப்பதாக பிரதமர் மோடி உறுதி
அளித்துள்ளார்.
தொற்றை
கட்டுப்படுத்து வதற்காக தமிழகத்தில் தொடர்ந்து அதிக அளவில் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தொற்றால் அதிகம் பாதிக்கப்படாத நோயாளி களை வீட்டிலேயே இருக்கச் செய்து கண்காணிப்பதில் கவ னம் செலுத்துமாறும்
பிரத மர் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி
அளித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment