தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்று ஜனவரியில் 60ஆம் ஆண்டு தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 17, 2021

தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்று ஜனவரியில் 60ஆம் ஆண்டு தொடக்கம்

டிசம்பருக்குள் விடுதலையை பல லட்சம் மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவு

காணொலியில் நடைபெற்ற  மதுரை மண்டல கலந்துரையாடல் கூட்டம்

மதுரை, மே 17- மதுரை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 14.5.2021 வெள்ளி மாலை 5 மணி முதல் 6.30 மணிவரை காணொலி வாயிலாக நடைபெற்றது. தென்மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர் தே.எடிசன்ராஜா அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார். மதுரை மாநகர மாவட்ட செயலா ளர் சுப.முருகானந்தம் அனைவரையும் வரவேற்று உரையாற்றி நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.

விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, மாவட்ட செயலாளர் விடுதலை தி.ஆதவன், பொதுக் குழு உறுப்பினர் வானவில் மணி, .. பொறுப்பாளர் சண்முகசுந்தரம், மண்டல செயலாளர் முருகேசன், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர், முருகானந்தம், காப்பாளர் முனியசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் பேக்கரி கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவா, ஆசிரியர் இராமசாமி, இராஜேஸ் வரி, இராமச்சந்திரன், போட்டோ ராதா, சுப்பையா, நாகராணி, ஆறுமுகம், விடுதலைசெல்வம், மாரிமுத்து, அன்பு, மாநில வழக்குரைஞரணி துணைச்செயலாளர் கணேசன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் எரிமலை, மாவட்ட . தலைவர் மன்னர் மன்னன், மாவட்ட .. செயலாளார் செங்கதிர், பெரியசாமி, சிங்கராசா, மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் .நேரு ஆகியோர் கருத்துரை யாற்றினர். இராஜபாளையம் நகரத்தலைவர் பு.சிவக்குமார் நன்றி கூறினார்.

கழக அமைப்பு செயலாளர் வே.செல்வம் கருத்து ரையாற்றினார். தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை மற்றும் உழைப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றை சட்டமன்ற தேர்தலில் பெருவெற்றிபெற்றுள்ளோம், தற்போது நாம் செய்ய வேண்டியது பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சுவர் விளம்பரம் செய்ய வேண்டும். 'விடுதலை'யை பரப்ப வேண்டும். கழக தோழர்களோடு தொடர்பில் இருக்க வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தனது உரையில் குறிப்பிட்டார்

பொதுச் செயலாளர் ஜெயக்குமார் உரை

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பங்களிப்பு, உழைப்பு, ஒருங்கிணைப்பு, வழிநடத்துதல் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தியுள்ளது.

"திராவிடம் வெல்லும்" நாளைய வரலாறு அதை சொல்லும் என ஒரு முழக்கத்தை முன்வைத்து நடப்பது வெறும் தேர்தல் அல்ல இனமான போர் அதில் திராவிடம் நிச்சயம் வெல்லும் என அறிவித்து கரோனா பெருந்தொற்றையும் பொருட்படுத்தாமல்  20 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதின் விளைவு தி.மு. தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெற்று மாண்புமிகு தளபதி மு.. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். பார்ப்பனர் இல்லாத அமைச்சரவை, சட்டமன்றம் அமைந்துள் ளது மகிழ்ச்சியாக உள்ளது. தேர்தல் வெற்றி குறித்து ஆசிரியர் அவர்கள்" இனமானப் போரில் திராவிடம் வென்றது" என தெரிவித்தார்கள்.

கரோனா ஒழிப்பு பணியில் கழகத்தின் பங்களிப்பு

கரோனா பெருந்தொற்றால் மக்கள் அவதியுறும் நிலையில் தமிழக முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளையின் சார்பில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ10 லட்சம் நிதி வழங்குவதாக தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்தார்கள். கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தமிழக முதல்வரிடம் இன்று வழங்கியுள்ளார்கள்.

அதோடு இல்லாமல் சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை மருத்துவ மனையை கரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற் காக தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது சிறப்புக்குறியது - மற்றவர்களுக்கு வழிகாட்டும் செயல்.

ஜனவரியில் 60 ஆண்டு தொடக்கம் 'விடுதலை'யை பல லட்சம் பேரிடம் சேர்ப்போம்

சமூகநீதி, பாலியல் நீதி, மாநில உரிமை, பகுத்தறிவு, களங்களில் தளராது வீறுநடை போடும் விடுதலை  கரோனா பெருந்தொற்றால் பொது முடக்கத்தால் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் உலகம் முடங்கலாம். விடுதலைக்கு முடக்கமில்லை என்று தமிழர் தலைவர் ஆசிரியர், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், விடுதலை பணித் தோழர்களின் தன்னலமற்ற தொண்டால், உழைப்பால் தொடர்ந்து விடுதலை வெளிவருகின்றது.  2022 ஜனவரியில் தமிழர் தலைவர் அவர்கள் விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்று 60 ஆம் ஆண்டு தொடக்கம். ஒரு நாளேட்டில் 60 ஆண்டுகாலம்  ஒருவர் ஆசிரியர் பணி என்பது உலக சாதனை அதன் மகிழ்வாக கழகத் தோழர்கள் அனைவரும் விடுதலையை நண்பர்கள், உறவினர்கள், என தங்களிடம் உள்ள வாட்ஸ்அப் எண்கள் அனைத்தையும் பிராட்காஸ்ட் குழு அமைத்து பிடிஎஃப் வடிவில் அனுப்புவது மிக முக்கியம் ஒரு நாளைக்கு ஒரு 10 நிமிடம் இதற்காக ஒதுக்கினால் டிசம்பர் மாதத்திற்குள் பல லட்சம் பேரிடம் விடுதலையை கொண்டு சேர்த்துவிடலாம்.

தந்தைபெரியார் பிறந்தநாள் நாடு முழுவதும் சுவர் எழுத்து பணி

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் நாடெங்கும் சுவரெழுத்து விளம்பரப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் அந்த வகையில் மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து மாவட்ட ஒன்றியங்களிலும் தோழர்கள் ஒவ்வொருவரும் அதனை பொறுப்பெடுத்துக் கொண்டு திறம்பட செயல்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்ப்பது நமது கடமை. அன்பிற்கினிய தோழர் பவுன்ராஜ் அவர்களின் இறப்பு மிகப்பெரிய இழப்பு, அவர் நமது இயக்கத்திற்கு ஆற்றிய அரும்பணிகள் ஏராளம், அந்த வகையில் அவர் ஆற்றிய அந்த பணிகளை இப்போது இருக்கக்கூடிய தோழர்கள் பகிர்ந்து கொண்டு முனைப்போடு செயல்படுத்த முன்வரவேண்டும். விடுதலையை பரப்புவது அதற்கு சந்தா சேர்ப்பது, திராவிடப் பொழில் இதழுக்கு சந்தா சேர்ப்பது போன்ற பணிகளில் தோழர்கள் ஆர்வம் காட்டிட வேண்டும். அதோடு இந்த கரோனா காலத்தில் தோழர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியம். எந்த இடத்திற்கு எங்கு சென்றாலும் தனிமனித இடைவெளி யுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொறுப்பா ளர்கள் அனைவரும் கழகத் தோழர்களுடன் தொடர் பில் இருப்பது மிகவும் அவசியம் அவ்வப்போது தொலைபேசி வாயிலாக கலந்துரையாட வேண்டி யதும், காணொலி கூட்டங்களில் பங்கேற்பதும் தோழர்களின் கடமையாகும். தமிழர் தலைவர் பேசும் காணொலி கூட்டத்தில் தோழர்கள் பெருமளவில் பங்கேற்பதும் அவசியம். விடுதலை நாளிதழை மக்களிடம் கொண்டு செல்வதைப் போல் இயக்க புத்தகங்களையும் பரப்பும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். சிறப்பாக நடைபெற்ற இந்த காணொலி கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கும் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களுக்கும் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருத்துரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்

தீர்மானம் - 1

9.5.2021 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற தலைமைச் செயற்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் - 2

தி.மு. தலைவர் தளபதி மு. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள தமிழக அரசுக்கு இக்கூட்டம் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3

"திராவிடம் வெல்லும்" என்னும் முழக்கத்தை முன்வைத்து சமூக நீதி, மதச்சார்பின்மையை முன்னிருத்தி அனைத்துக் கட்சியினையும் ஒருங்கிணைத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்வெற்றிபெற்று திராவிடர் ஆட்சி அமையக் காரணமாக இருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறது.

தீர்மானம் - 4

அறிவுலக ஆசான் தந்தைபெரியார் 143ஆவது பிறந்தநாள் விழாவினை திராவிடர்களின் தேசிய திருவிளாவாக எழுச்சியோடு கொண்டாடும் வகை யில் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதோடு சுவர் எழுத்து பிரச்சாரத்தை பரவலாக அனைத்து பகுதி களிலும் எழுதுவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம்-5

கரோனா பெருந்தொற்றின் காரணமாக அரசு அறிவித்துள்ள பொது முடக்கத்தினால் விடுதலையின் வினியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது அதனை சரிசெய்யும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று விடுதலையை PDF வடிவில் லட்சக்கணக்கில் மக்களிடம் பரப்புவது என முடிவு செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment