நமது
கழகக் குடும்பங்களில் ஒன்றாகிய சென்னை பெரியார் பெருந்தொண்டர் மான மிகு பெரம்பூர் சபாபதி-இந்திராணி அவர் களது மூத்த மகளும், இயக்கக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவருமான டாக்டர் திருமதி அறிவுக்கண்ணு எம்பிபிஎஸ் (வயது 71) அவர்கள் நேற்று (16.5.2021) பிற்பகல் 2.30 மணிக்கு - உடல் நலக் குறைவு ஏற்பட்டு, பெங்களூருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் இயற்கை யெய்தினார் என்பதை அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறோம்.
கழக
இலட்சியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவருக்குத் தந்தை பெரியார் பெயர் சூட்டினார். 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அமெரிக்க - பெரியார் பன்னாட்டு அமைப்பு மாநாட்டிற் குக் கூட அவர் தமது சகோதரி கழக துணைப் பொதுச் செயலாளர் ச.இன் பக்கனி
அவர்களுடன் வந்தவர்.
பெரியார்
திடல் நிகழ்ச்சிகளுக்குத் தவறாது வருபவர். நம்மிடம் மாறா அன்பு, பற்று கொண்டவர்.
அவரது
மறைவு, அவர் தம் தம்பி ச.முகிலரசு மறைவு
போன்றவைகளில் மிகவும் வருந்தி வாடும் தோழர் ச.இன்பக்கனி அவர்கட்கும்
மற்றும் குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.5.2021

No comments:
Post a Comment