அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு தமிழ்நாடு அரசின் முடிவுக்கு வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு தமிழ்நாடு அரசின் முடிவுக்கு வரவேற்பு

சென்னை,மே15- பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தலைவர் முனைவர் பி.இரத் தினசபாபதி, பொதுச் செய லாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந் திர பாபு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வு குறித்து மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. முடிவுகள் அறிவிக் கப்பட்ட பிறகு, நடந்து முடிந்த தேர்வுகள் அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை அளிக்கவில்லை என்பது வெளிப்பட்டது. அதன் தொடர்ச்சியாக எழுந்த பல்வேறு கோரிக்கைகளையும், பல்கலைக்கழக மாணவர்கள் தேர்ச்சி குறித்து ஏற்கெனவே நீதிமன்றம் தெரிவித்திருந்த கருத்துகளையும் கவனத்துடன் பரிசீலித்து, தமிழ்நாடு அரசு மீண்டும் தேர்வு நடத்தலாம் என்ற நியாயமான முடிவை எடுத்துள்ளது வரவேற்கத் தக்கது.

தேர்ச்சி பெறாமல் போன அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு தருவ தும், தேர்ச்சி பெற்ற மாணவர் களில் தேர்வு முறையில் திருப்தி இல்லாமல் மீண்டும் தேர்வு எழுது விரும்பும் மாணவர் களும் தேர்வு எழுதலாம் என்கிற  அறிவிப்பும், மாணவர் களுக்கு சமவாய்ப்பை கூடிய வரை உருவாக்கித் தரும் முயற்சியாகும்.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் கருத்துகளை யும் கேட்டறிந்து, மாணவர் களுக்கு பழக்கப்பட்ட தேர் வுத் தாள் அமைப்பில் மன அழுத் தம் இல்லாமல் அனைவரும் தேர்வு எழுதிட வழி செய்யப்பட்டுள்ளது பாராட்டிற் குரியது. நடத் தப்பட இருக்கும் தேர்விற்குக் கட்டணம் ஏதும் செலுத்த அவசியம் இல்லை என்ற அறிவிப்பு பேரிடர் காலத்தில் மாணவர்களும் அவர் தம் பெற்றோரும் சந்திக்கும் பொருளாதார நெருக் கடியை கருத்தில் எடுத்து மேற் கொள்ளப்பட்ட முடிவு. இத்தகைய முடிவு பிற மாநி லங்களும் பின்பற்ற வேண்டிய சிறந்த  முன்னுதாரணமாகும். அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் நலன் சார்ந்து தமிழ்நாடு அரசு மேற் கொண்டுள்ள நடவடிக்கை களை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வரவேற்கிறது.

No comments:

Post a Comment