அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்
தமிழகத்தில்
கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டி ருந்தாலும் அதற்கான தடுப்பு நட வடிக்கைளை தமிழக
அரசு தீவிரப் படுத்தியுள்ளது. ஒருங்கிணைந்த செயல் பாட்டை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக
வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த 13ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் அனைத்து சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தக் கூடிய வழி முறைகள் குறித்து ஆலோ சனைகள் வழங்குவதற்காக சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அக்கூட்டத்தில்
நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக பின்வரும் தீர்மானம் (தீர்மானம் எண்.4) நிறைவேற் றப்பட்டது. - "நோய்த் தொற்றுப் பர வலைக் கட்டுப்படுத்தும்
வழி முறைகள் குறித்த ஆலோ சனைகளை வழங்க, சட்டமன்றக் கட்சிகளைச் சார்ந்த உறுப் பினர்களைக் கொண்ட ஓர் ஆலோ சனைக் குழு அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.
மேலே
தெரிவிக்கப்பட்ட தீர்மானத் தின் அடிப்படையில், அனைத்து சட்ட மன்றக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந் துரையின் அடிப்படையில் முதல மைச்சர் அவர்களின் தலைமையில் பின்வரும் சட்டமன்ற உறுப்பினர் களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது.
மேற்படி
ஆலோசனை குழு வானது அவசர அவசியம் கருதி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழி முறைகள் குறித்து ஆலோ சனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும். இக்குழுவிற்கு பொதுத் துறைச் செயலாளர் உறுப்பினர் செயலராக செயல்படுவார்."
இவ்வாறு
அரசின் செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தீர்மானத்தின்
அடிப்படையில் தற்போது ஆலோசனைக் குழு உறுப் பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள் ளனர். அதன்படி,
சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள 13 கட்சிகளில் இருந் தும் தலா ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்துக்கட்சி குழு கூடி ஆலோ சிக்கும். ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக திமுக சார்பில் மருத்துவர் நா.எழிலன், அதிமுக
சார்பில் மருத்துவர் சி.விஜயபாஸ்கர், காங்கிரஸ்
சார்பில் ஏ.எம்.முனிரத்தினம்,
பாமக சார்பில் ஜி.கே.மணி,
பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், மதிமுக சார்பில் மருத்துவர் தி. சதன் திரு மலைக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வி.பி.நாகை
மாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தி.இராமச்சந்திரன், மனித நேய
மக்கள் கட்சி சார்பில் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில்
ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி.வேல் முருகன்,
புரட்சி பாரதம் சார்பில் பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment