சென்னை,
மே 12 ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு, இனியாவது முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என, கே.எஸ்.அழகிரி
வலியுறுத்தியுள்ளார்.
இது
தொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட
அறிக்கை:
தடுப்பூசி
போடுவதில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தை பெற்றிருப்பதாக பாஜக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால், இந்தியாவில் 100 பேருக்கு 10.82 பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆனால்,
இஸ்ரேல் நாட்டில் 120, பிரிட்டனில் 72, அமெரிக்காவில் 71 என்ற விகிதத்திலும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மக்கள்தொகையை விட 4 மடங்கு அதிகமாகவும், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளை விட 20 மடங்கு அதிகமாகவும், இஸ்ரேலை விட 160 மடங்கு அதிகமாகவும் இந்தியா மக்கள்தொகையைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், மற்ற நாடுகளோடு இந்தியாவை ஒப்பிடுவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல.
சீரம்
நிறுவனத்தின் தடுப்பூசி டோஸ் உற்பத்தித் திறன் மாதம் ஒன்றுக்கு 6 கோடியாகவும், பாரத் பயோடெக் தடுப்பூசி டோஸின் உற்பத்தித் திறன் மாதம் ஒன்றுக்கு 2 கோடியாகவும் உள்ளன. தோராயமாக இரு நிறுவனங்கள் மூலம் தினசரி 26 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கு ஜூலை மாதம் வரை காத்திருக்க வேண்டும். தடுப்பூசி டோஸ்களை இறக்குமதி செய்வதன் மூலமே இத்தகைய பற்றாக்குறையைப் போக்க முடியும்.
பேராயுதமாகப்
பயன்படுத்த வேண்டிய தடுப்பூசி மருந்தை வணிகமாக்கி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உயிர்களோடு மத்திய பாஜக அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. கரோனாவின் இரண்டாவது பரவல் தீவரம் அடைந்துள்ள நிலையில், தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டியது மிக மிக அவசியமானதாகும். அப்போது தான் மூன்றாவது அலையை நாம் எதிர்கொள்ள முடியும்.
ஆனால்,
மோடி அரசோ எவ்வித வெளிப்படைத்தன்மையும் இன்றி அலட்சியமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க 10-க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக உள்ளன. அவர்களது உற்பத்தியை முடுக்கிவிட்டால் மட்டுமே, நாடு முழுவதும் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.
கரோனாவின்
இரண்டாவது அலையில், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் டோஸ் போட்டவர்களுக்கே இன்னும் இரண்டாவது டோஸ் போடவில்லை. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்றைக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப் போகிறார்கள் என்ற அச்சம் கலந்த கேள்வி எழுகிறது.
எனவே,
கடந்த கால மத்திய ஆட்சியாளர்களின் அனுபவத்தை எடுத்துக்கொண்டு, கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.
ஆமை
வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு, இனியாவது முயல் வேகத்தில் செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு
கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment