கோவை மாவட்ட கலந்துரையாடலில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் உரை
கோவை, மே. 18- கோவை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் சனிக் கிழமை மாலை 5 மணி முதல் 7.45 மணி வரை காணொலி வழியாக நடைபெற்றது.
கூட்டத்தில் கோவை மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்நாதன் வர வேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் தலைமை வகித்தார். கழக காப்பாளர் வசந்தம் கு.இராமச்சந்திரன், மண்டல தலை வர் ஆ.கருணாகரன், மண்டலச் செய லாளர் ச.சிற்றரசு, பொதுக்குழு உறுப் பினர்கள் பொள்ளாச்சி பரமசிவம், திலகமணி,மண்டல மகளிரணி செய லாளர் ப.கலைச்செல்வி, மண்டல இளைஞரணி செயலாளர் வெள்ள லூர் ஆ.பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் சி.மாரிமுத்து, மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் க.காளிமுத்து, மண்டல மாணவர் கழகச் செயலாளர் ராகுல் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் ஆகி யோர் தொடக்க உரையாற்றினார்கள்.
மாநகர அமைப்பாளர் மே.ப. ரங்கசாமி, குனியமுத்தூர் தமிழ்முரசு, மாவட்ட இளைஞரணி தலைவர் திராவிடமணி, இளைஞரணி செய லாளர் கணபதி மு. தமிழ்செல்வன், பொள்ளாச்சி நகரத் தலைவர் வீரமலை, வேட்டைக்காரன்புதூர் முருகானந்தம், சிவராஜ், மனோஜ், போத்தனூர் வெங்கடேஷ், பகுத்தறி வாளர் கழக மாவட்டத் தலைவர் அக்ரி நாகராஜ், அய்யாசாமி, ஒன்றிய செயலாளர் சிவக்குமார், அ.மு.ராஜா, வெற்றிசெல்வன், ஆட்டோ சக்தி, மகளிரணி கவிதா, முத்துமணி, த.க. யாழினி, கிருஷ்ணன், இலைக்கடை செல்வம், மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் வேலுச்சாமி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்
சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மண்டல செயலாளர் குருசாமி, தஞ்சை மண்டல இளைஞரணி செயலா ளர் முனைவர் வே. ராஜவேல், தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன், மாநில வழக்கு ரைஞரணி துணைச்செயலாளர் தம்பி பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர் கழகப் பொறுப்பாளர் யாழினி தீர்மானங்களை முன்மொழிந்தார்.
கூட்டத்தின் நிறைவில் கோவை மாநகர தலைவர் புலியகுளம் வீரமணி நன்றியுரை வழங்கினார்.
மாணவர் கழகப் பொறுப்பாளர் த. கவுதமன் காணொலியை ஒருங்கி ணைத்தார் இறுதியாக கழகபொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.
அப்போது கூறியதாவது.
இந்த காணொலி கலந்துரையாடல் மூலமாக உங்கள் அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல வாய்ப்பு என்னவென்றால் அனைத்து பொறுப்பாளர்களும் தோழர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்திருப்பதுதான். ‘திராவிடம் வெல்லும்’ என்ற முழக்கத்தை முன் வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையையும் பொருட்படுத் தாமல் தமிழகமெங்கும் தமிழர் தலை வர் அவர்கள் மேற்கொண்ட பிரச் சாரம் மிகப்பெரிய பங்களிப்பாக அமைந்தது.
இந்த தேர்தல் நமக்கானது ஆசிரி யர் அவர்களின் அறிக்கை தொடர் பிரச்சாரம் என இந்த தேர்தலில் 20 நாட்களில் 36 கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று பிரச்சாரம் செய்தார். அதில் 28 தொகுதிகள் பெரும் வெற்றி பெற்றதோடு இந்த இனமானப் போரில் திராவிடம் வென்றது. திராவிட இயக்க ஆட்சி தற்போது அமைந்துள்ளது.
தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் கீமீ ணீக்ஷீமீ தீமீறீஷீஸீரீ tஷீ ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ stஷீநீளீ என்று பதிவிட்டதும், பார்ப்பனர் இல்லாத சட்டமன்றமாக சிறப்பாக அமைந்ததும், இது கொள் கைக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
நம் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை திமுக இளைஞ ரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பெரியார் திடல் வருகை தந்து சந்தித்தார். இதையொட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘எங்கள் கொள்கை திசை காட்டி எங்களை நாளும் வழிநடத்தும் ஆசிரியரை சந் தித்தேன்’ என்று ட்வீட் செய்துள்ளார்.
திமுக இளைஞரணி தோழர்க ளுக்கு திராவிடர் கழகம் நமது திசைகாட்டும் இயக்கம் என்பதை வழிகாட்டியுள்ளார்.
இது மிகப்பெரிய அடுத்த தலை முறை கொள்கை வளர்ச்சியாகும்.
மனிதநேய இயக்கம்
நமது இயக்கம்
சமீபத்தில் தமிழக முதல்வரை சந்தித்த கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக கழக தலைவர் ஆசிரியர் அறிவித்த 10 லட்ச ரூபாய் நன்கொடையை வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல்
பெரியார் திடலில் உள்ள மருத் துவமனையை பொதுமக்களுக்கு கரோனா சிகிச்சை அளிக்க பயன் படுத்திக் கொள்ளவும் வழங்கினார்.
அதை ஏற்றுக் கொண்டு தமிழக அரசாங்கம் அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இப்படி மனித நேயப் பணிகளை நமது இயக்கம் தொடர்ந்து செய்து வருகிறது.
வரும் ஜனவரி மாதம் தமிழர் தலைவர் அவர்கள் விடுதலை ஆசிரிய ராக பொறுப்பேற்று அறுபதாம் ஆண்டு தொடங்குகின்ற நிலையில் உலக அளவில் 60 ஆண்டு காலம் நாளிதழுக்கு ஆசிரியராக பணியாற் றியவர் யாரும் இல்லை அப்படி ஒரு உலக சாதனைக்கு சொந்தக்காரர் நம்முடைய ஆசிரியர்.
இதை முன்னெடுத்து பல லட்சம் பேரிடம் விடுதலை நாளிதழ் கொண்டு சேர்க்கும் பணியை கழகத் தோழர்கள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
விடுதலையை பரப்புவதே நமது லட்சிய நோக்கமாக இருக்க வேண்டும்.
இந்த ஆட்சியை பாதுகாக்க வாளும் கேடயமுமாக நாம் இருக்க வேண்டும் என ஆசிரியர் அறிவித்து உள்ளார். கழகதோழர்கள் இதை மன தில் வைத்து கொண்டு இயக்க பணி யாற்றவேன்டும்.
வரும் செப்டம்பர் 17.தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சுவர்எழுத்து பிரச்சாரம் அனைத்து பகுதிகளிலும் தற்போதே தொடங்கி நடைபெற வேண்டும்.சென்ற ஆண்டு கோவை வெள்ளளூர் பகுதியில்தான் முதன்முதலில் சுவரெழுத்து பணி தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சுவரெழுத்து பிரச்சார அலை மிகப்பெரிய அள விற்கு பெரியாரை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது.
யாராக இருந்தாலும் எங்கே இருந்தாலும் கழக தலைவர் ஆசிரியர் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
நாம் உற்சாகமாக வேலை செய் வோம் அந்தந்த பகுதியில் உள்ள தோழர்களை முன்னிலைப்படுத்தி அந்தந்த பகுதியில் உள்ள பொறுப் பாளர்களை ஊக்கப்படுத்தி மேலும் வருகின்ற காலங்களில் இயக்கப் பணி மேலும் சிறப்பாக நடைபெற வேண்டும்
தந்தைபெரியார் அவர்களும், தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் வாகனத்தில் பயணம் செய்யும் பொழுது வழியில் இருக்கும் தோழர் களின் வீடுகள், கடைகளில் வாகனத்தை நிறுத்தி அவர்களது நலம் விசாரித்து விட்டு செல்வார்கள். ஏனென்றால் அப்பொழுதுதான் அந்த பகுதியில் அந்த தோழர்களுக்கு மரியாதை கிடைக்கும் அதன் மூலமாக இயக்கத் திற்கும் மரியாதையும் இயக்கம் வளர் வதற்கும் வாய்ப்பாக அமையும். இந்தப் பணியை தான் பொறுப்பாளர் களும் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள் சொல் வார், கொள்கையில் ஓட்டை இருந் தாலும் பரவாயில்லை...
ஆனால் ஒழுக்கத்தில், நாணயத் தில் ஓட்டை விழக் கூடாது என்பார். இதை கவனத்தில் வைத்துக்கொண்டு கழகத் தோழர்கள் பணியாற்ற வேண் டும்.
நன்கொடை வசூல் போன்ற இயக்க பணிகளுக்கு செல்லும் பொழுது குறைந்தது இரண்டு மூன்று தோழர் களாவது குழுவாக சென்று இந்த பணியினை மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் வெளிப்படைத் தன்மை இருக்கும்.
கோவை மாவட்ட தோழர்கள் மேல் தமிழர் தலைவர் ஆசிரியரின் பெரும் மதிப்பு நம்பிக்கையையும் பெற்ற தோழர்களாவர். வருங்காலங் களில் இன்னும் சிறப்பாக செயல்பாடு களை அமைத்து
தோழர்கள் பணியாற்றி வேண்டு மென கூறி மாவட்ட கழகத்திற்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து தன் உரையை நிறைவு செய்தார்.
நிகழ்வில் இறுதியாக மாநகர தலைவர் க.வீரமணி நன்றியுரை வழங் கினார்.
தீர்மானங்கள்.
இரங்கல் தீர்மானம் 1.
கோவை மாவட்ட முன்ணனி கழகதோழர் பொதுக்குழு உறுப்பினர் மறைந்த சிங்கை ஆறுமுகம் அவர்களுடைய மறைவிற்குப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து மாவட்ட கழக சார்பில் ஒரு நிமிடம் அமைதி காத்து மரியாதை செய்யப்பட்டது.
தீர்மானம் - 2.
9.5.2021 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலை மையில் காணொலி வாயிலாக நடை பெற்ற தலைமைச் செயற்குழு தீர்மா னங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது
தீர்மானம் - 3
தி.மு.க தலைவர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள தமிழக அரசுக்கு இக் கூட்டம் பாராட்டுகளையும், வாழ்த் துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 4
திராவிடம் வெல்லும் என்னும் முழக்கத்தை முன்வைத்து சமூக நீதி, மதசார்பின்மையை முன்னிறுத்தி அனைத்து கட்சியினையும் ஒருங்கி ணைத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்வெற்றிபெற்று திராவிடர் ஆட்சி அமைய காரண மாக இருந்த தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறது
தீர்மானம் - 5.
அறிவுலக ஆசான் தந்தைபெரியார் 143ஆவது பிறந்தநாள் விழாவினை திராவிடர்களின் தேசிய திருவிழா வாக எழுச்சியோடு கொண்டாடும் வகையில் வாழ்த்துகளை பரிமாறி கொள்வதோடு சுவர் எழுத்து பிரச் சாரத்தை பரவலாக அனைத்து பகுதி களிலும் எழுதுவது என முடிவு செய் யப்படுகிறது.
தீர்மானம்-6.
கரோனா பெருந்தொற்றின் கார ணமாக அரசு அறிவித்துள்ள பொது முடக்கத்தினால் விடுதலையின் வினி யோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது அதனை சரிசெய்யும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று விடுதலையை பிடிஎஃப் வடிவில் லட்சக்கணக்கில் மக்களிடம் பரப்புவது என முடிவு செய்யப்படுகிறது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:
Post a Comment