‘மன் கி பாத்' என்ன சொல்லுகிறது?
* மக்களுக்குத் தடுப்பூசி போடுவதில், உலக நாடுகள் வரிசையில் இந்தியா 77 ஆவது இடத்தில் உள்ளது.
>> 100 ஆவது இடத்தில் இல்லை பார்த்தீர்களா? என்று கேட்டாலும் கேட்பார்கள்.
வேறு வேலையில்லை
* இந்தியா - உலகளவில் மிக அதிக இளம் வயதுடையவர்கள் (18-35 வயது) கொண்ட நாடாகும்.
>> மனித வளம் பயன்படுத்தப்படுவதில்லையே!
சீனாவைப் பார்!
றீ பணிகளில் பெண்கள் இந்தியாவில் 20 விழுக்காடே! சீனாவிலோ இது 30 முதல் 35 விழுக்காடு!
>> பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காத தாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது.
- தந்தை பெரியார் (‘குடிஅரசு', 10.6.1935).
அதிர் வேட்டாக இருக்கிறதே!
* காற்று மாசுபாடு காரணமாக ஆண்டு தோறும் உலகில் உயிர் இழப்போர் 70 லட்சம் பேர்.
>> ‘தப்பு - தப்பு' அப்படி எல்லாம் ‘வாயு பகவானை' சொல்லக்கூடாது!
அரசியல் இல்லை
* அ.இ.அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடி - கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு.
>> எதிலும் அரசியல் என்ற கரோனா ஒழிவது ஆரோக்கிய அரசியல்!
விளையும் பயிர்?
* யூடியூப்பைப் பார்த்து நாட்டு வெடி தயாரித்த இரு சிறுவர்கள் கைது.
>> விஞ்ஞான கருவிகளின் விபரீதம்!
திருப்பம் வருமா?
* சிகிச்சை முடிந்து புதுவை முதல்வர் திரு.ரங்கசாமி புதுச்சேரி திரும்பினார்.
>> இடைவெளியில் நடந்தது என்ன என்று ஆய்வு செய்வாரா?
இவரெல்லாம் ஒரு எம்.பி.,?
* நான் நாள்தோறம் கோமியம் (மாட்டு மூத்திரம்) குடிப்பதால் கரோனா என்னைத் தொற்றவில்லை. - மாலேகான் புகழ் பிரக்யாசிங் தாக்கூர்
>> நீண்ட காலமாக மருத்துவமனையில் இருந்தவர் ஆயிற்றே!
No comments:
Post a Comment