பத்திரிகையாளர்களுக்கு இழப்பீடு, ஊக்கத்தொகை அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 28, 2021

பத்திரிகையாளர்களுக்கு இழப்பீடு, ஊக்கத்தொகை அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி

சென்னை,மே27- சென்னை பத் திரிகையாளர் சங்க பொதுச் செயலர் சங்கர் வெளியிட் டுள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது,

கரோனா தொற்றால் இறந்த பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் குடும் பங்களுக்கு, தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப் படும். சிறப்பு ஊக்கத்தொகை, 3,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ள முதல்வ ருக்கு நன்றி.கரோனா காலத் தில், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அடைந்து வரும் துயரங்களை குறைக்கும் வகையில், முதல்வ ரின் அறிவிப்புகள் இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. சலு கைகள், அரசு அங்கீகார அட்டை, ஆட்சியரால் வழங் கப்பட்ட அடையாள அட்டை, இலவச பஸ் பாஸ் என, ஏதாவது ஒன்றை வைத்திருப் போருக்கு மட்டும் வழங்கப் படும் என்ற அறிவிப்பு, பெரும் பாலான பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கு பலன் அளிக்காமல் போய்விடும்.எனவே, உதவி ஆசிரியர், துணை ஆசிரியர், செய்தி ஆசிரியர், சிறப்பு செய்தியா ளர்கள் உட்பட, நிறுவனங் களில் பணியாற்றும், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகவிய லாளர்களுக்கும் பலன்கள் கிடைக்கும் வகையில், முதல் வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் இவ்வாறு குறிப் பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு ஊடக வியலாளர்கள் சங்கத் தலை வர் சக்திவேல், தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர்கள் சங்கத் தலைவர் பிரபுதாசன் ஆகியோர் தமிழக முதலமைச் சருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment