"ரீஃபார்ம்களை ஆரம்பித்து விடுகிற எல்லா லீடர்களையும், ஒழுங்கு தப்பினவர்கள் என்று சொல்லுவதற்கில்லைதான்.
சாஸ்த்ர,
ஸம்பிரதாய விதிகளாகிற ஒழுங்குகளை இவர்களும் விட்டவர்கள்தான் என்பதால் இவர்களை ஸனாதன தர்ம பீடங்களான மடஸ்தாபனங்களிலிருக்கிற நாங்கள் ஒப்புக் கொள்ளத்தான் இல்லை என்றாலும், இவர்கள் Personal Life இல் (தனி வாழ்க்கையில்) ஸத்யம், ஒழுக்கம், தியாகம், அன்பு போன்ற பலவற்றைக் கடைப்பிடித்தவர்கள் என்பதை ஆக்ஷேபிப்பதற்கில்லை. ஓரளவிற்குப் படிப்பு விஷய ஞானம் எல்லாம் உள்ளவர்களாகவும் ஜனங்களை நல்லதில் கொண்டு போக வேண்டும் என்பதில் நிஜமான அக்கறை கொண்டவர்களாகவுமே இந்தச் சீர்திருத்தவாதிகளில் பலர் இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்!" (தெய்வத்தின் குரல்' 3ஆம் பகுதி பக்கம் 336).
சங்கராச்சாரியார்
யாரை நினைத்து இப்படி எழுதுகிறார்? அவர் காலத்தில் வாழ்ந்த ரீஃபார்மர் தந்தை பெரியாரை நினைத்துதானே! இவை எல்லாம் குருமூர்த்திகளுக்கு வசதியாக மறந்தே போச்சோ!
சங்கராச்சாரியார்
ஏதோ தியாக வாழ்க்கை செய்தாராமே - பட்டியலிடுவாரா? 95 வயதிலும் மூத்திர வாளியை சுமந்து கொண்டு மக்களுக்கு உழைத்த தலைவர் தந்தைபெரியார் எங்கே? சிறைப் பறவை பெரியார் எங்கே, பார்ப்பனர்களுக்காகவே மக்களைச் சுரண்டி கொழுக்க வைக்கும் குறுமதியாளர்கள் எங்கே! எங்கே! சரி குருமூர்த்தி வழிக்கே வருவோம் - பெரியவாளே பெரியாரைக் கண்ணியமாகக் குறிப்பிடும்போது, கத்துக்குட்டி குருமூர்த்திகள் கழிசடைத்தனமாக எழுதுவது ஏன்? ஏன்?
No comments:
Post a Comment