செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 17, 2021

செய்தியும், சிந்தனையும்....!

பழைய மொழி

*           இன்று முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூபாய் மூன்று குறைந்தது.

>>           ஏறிய வயதும், ஏறிய விலையும் குறை யாது என்ற பழமொழியை பழைய மொழி ஆக்கி விட்டது தி.மு.. அரசு. 

கரோனாவே 'கடவுளப்பா!'

*           திருப்பதியில் அரை மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம்.

>>           ; காக்கை இல்லை என்பார்களே, அது இதுதான் - எல்லாம் கரோனா படுத்தும் பாடு!

ஸ்பீடு பிரேக் தேவை!

*           ஜூலை மாதத்துக்குள் 51 புள்ளி 6 கோடி பேர்களுக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கும்.

- மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்

>>           தாங்காதப்பா தாங்காது - நாடு தாங்கவே தாங்காது.  

இதுதான் மக்கள் நல அரசு

*           கரோனா குறித்து ஆலோசனைகள் கூற அனைத்துக் கட்சிக் குழு தமிழ்நாடு - அரசு அறிவிப்பு. 

>>           கரோனா தொற்றுக்குக் கட்சி பேதம் ஏது?  

மீண்டும் அந்தக் காலம் வந்ததோ?

*          தெலங்கானாவில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள மரத்தில் கட்டிலைக் கட்டிக் கொண்டார்.   

>>           ஆதி மனிதன் மரத்திலும், மரப் பொந்துகளிலுமே தானே வாழ்ந்தான்! 

சுறுசுறுப்பாக இருப்போம்!

*           இன்று உலக தேனீக்கள் தினம் 

>>           ஆண் தேனீக்கள் சோம்பலானவை!

வேண்டாம் அரசியல் கண்ணோட்டம்

*          உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதி பதவிகள் காலி.

>>           நியமிக்கப்படுவோர் - மதச் சார் பன்மையினராக இருக்கட்டும்!

No comments:

Post a Comment