ஒன்றியமல்ல: இந்தியா - மாநிலங்களின் கூட்டாட்சியே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 20, 2021

ஒன்றியமல்ல: இந்தியா - மாநிலங்களின் கூட்டாட்சியே!

 காணொலியில் தமிழர் தலைவர் ஆணித்தரமான கருத்து

சென்னை, மே 20 ‘‘ஒன்றியமல்ல; இந்தியா - மாநிலங்களின் கூட்டாட்சியே!'' என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இட ஒதுக்கீடுக்கு ஆபத்து

கடந்த 13.5.2021 மாலை 7 மணியளவில் ‘‘இட ஒதுக்கீடுக்கு ஆபத்து'' என்ற  தலைப்பில் நடை பெற்ற காணொலி கருத்தரங்கத்தில் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்கள் தொடக்கவுரையாற்ற,  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

‘‘பாலாஜி'' என்ற ஒரு வழக்கு கருநாடக மாநிலத்தி லிருந்து நடைபெறுகிறது. அந்த வழக்கை விசா ரித்த ஒரு நீதிபதி, 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்று சொல்கிறார் என்று மராத்தா வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறதே - அந்த 50 சதவிகிதத்தைப்பற்றிய ஒரு வரலாறு. முதலில் அதைத் தெரிந்துகொண்டு, அடுத்த கட்டத்திற்கு வரலாம்.

உச்சநீதிமன்றத்தினுடைய நீதிபதிகள், மண்டல் கமிசன் வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு - ‘இந்திரா சகானி' வழக்கில், தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் அவர்களின் அற்புதமான தீர்ப்பு!

உச்சநீதிமன்ற நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் அந்த வழக்கில் தனியே ஒரு அற்புதமான தீர்ப்பை எழுதியிருக்கிறார்.

என்றைக்குமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டு சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், அதைப் படித்தால் போதுமானதாகும்.

அவரிடம், “நாம் செல்லும் என்றுதான் எழுதுகிறோம்.  நீங்களும் அதைத் தானே எழுதுகிறீர்கள். மெஜாரிட்டி தீர்ப்போடு சேர்ந்து, இணைந்து கொள்ளுங்கள்; தனியே ஒரு தீர்ப்பை எழுதவேண்டாமேஎன்று தலைமை நீதிபதி ஜீவன்ரெட்டி உள்பட பெரும்பான்மை நீதிபதி களாக இருக்கக்கூடியவர்கள் சொன்னபொழுது,

இல்லை, இல்லை. நான் பல விஷயங்களை விவர மாகச் சொல்லவேண்டும். எனவே தனியே விரிவாக எழுதுகிறேன்என்று சொல்லி எழுதினார் நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள்.

ஒரு சிறப்பான தீர்ப்பை காலங்காலமாக இருக்கக் கூடிய ஓர் ஆவணம் போன்று - சமூகநீதிக்கான ஆவணம் - உரிமைச் சாசனம் (மாக்ன கார்ட்டா) என்று சொல்வார்களே இங்கிலாந்தில் - அதுபோன்று எழுதக் கூடிய தீர்ப்பாக - நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் எழுதியிருக்கின்ற அந்தத் தீர்ப்பில், எல்லா வாதங்களையும் எடுத்து, அழகாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.

ஒன்பது நீதிபதிகளுக்கு முன்னால், பிரபலமான வழக்குரைஞர்கள் யார் யாரெல்லாம் வாதாடினார்கள். என்ன நடந்தது?

அழகாக நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் அவர்கள், பல்வேறு மூத்த வழக்குரைஞர்கள், சட்ட நிபுணர்களுடைய கருத்துகளையெல்லாம் பதிவு செய்கிறார்கள்.

50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு தாராளமாகப் போகலாம். அதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று நீதிபதி கிருஷ்ணய்யரிலிருந்து, நீதிபதி பசல் அலியிலிருந்து மற்ற நீதிபதிகள் சொல்லியிருப்பதை யெல்லாம் வரிசையாகத் தொகுத்து நீதிபதி இரத்தின வேல் பாண்டியன் அவர்கள் தனியே எழுதிய தீர்ப் பிலே கொடுத்திருக்கிறார்.

அதில் மிக முக்கியமான ஒன்றைப் படிக்கிறேன் கேளுங்கள்:

Mr. Jethmalani strongly articulated that the observation in Balaji that reservation under Article 16(4) should not be beyond 50% is only an obiter dicta since that question did not at all arise for consideration in that case. Therefore, according to him, this observation is not a law declared by the Supreme Court within the meaning of Article 141 of the Constitution. He continued to state that unfortunately some of the subsequent decision have mistakenly held as if the question of permissible limit has been settled in Balaji while, in fact, the view expressed in it was an obiter dicta. 

நண்பர்களே, நன்றாக கவனியுங்கள்!

இது ஒரு முடிவாக எடுத்து உச்சநீதிமன்றத்தால் சொல்லப்பட்ட தீர்ப்பின் கருத்தல்ல. போகிற போக்கில், பொதுவான இடத்தில் சொல்லுகின்றபொழுது, ‘பாலாஜி' என்ற வழக்கிலிருந்து, ஓரிடத்தில் இதை சொன்னார்கள். அது வழக்கிற்கு நேரிடையான சம் பந்தப்பட்ட பிரச்சினைக்குரிய தீர்வாகவோ, தீர்ப்பாக அமையவில்லை.

எப்படியோ நீதிபதிகள் பல கருத்துகளை சொல்லு கிறார்கள். அதுபோல, அந்த இடத்தில் ஒன்றாக எடுத்துச் சொன்னது.

ture of affirmative action, firstly to eliminate the past inhuman discrimination and secondly to ameliorate the sufferings and reverse the genetic damage so that the people belonging to 'backward class' can be uplifted. When it is the main objective of Clause (4) of Article 16 any limitation on reservation would defeat the very purpose of this Article falling under Fundamental Rights and, therefore, reservation if the circumstances so warrant can go even upto 100%''    - ஜெத்மலானியின் வாதம்.

இதுதான் இட ஒதுக்கீட்டினுடைய தத்துவம். அதை மிக அழகாகச் சொல்லிவிட்டார்கள்.

அடுத்தபடியாக நண்பர்களே, பலரும் எழுதக் கூடிய, மிக முக்கியமாக இருக்கக்கூடிய ஒரு தீர்ப்பில்,

கருநாடக மாநில வழக்குரைஞர் வசந்தகுமார் என்ற ஒரு வழக்கில், பல கருத்துகளை எடுத்துச் சொன் னார்கள்.

நீதிபதி .சின்னப்ப ரெட்டி

நீதிபதி .சின்னப்ப ரெட்டி என்ற உச்சநீதிமன்ற நீதிபதி முற்போக்குக் கருத்துள்ளவர். தெளிவான ஒரு கருத்தை எடுத்துச் சொன்னார்.

பின்னாளில் வந்த ஒரு வழக்கிலே கூட, கருமாச்சாரி என்ற வழக்கில் அதையே கையாண்டார்கள். நீதிபதி சொன்ன கருத்தை அப்படியே எழுதியிருக்கிறார்.

50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்று தீர்ப்பு அளித்திருக்கிறார்களே, அதன் அடிப்படையே கேள்விக்குறியானது என்று சொல்கி றோம்.

50 சதவிகித இட ஒதுக்கீட்டைப்பற்றி சொல்லுகிற பொழுது, இதையும் நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் எழுதிய தீர்ப்பிலிருந்துதான் உங்களுக்குப் படித்துக் காட்டுகிறேன்.

‘‘Again in Vasantha Kumar, Chinnappa Reddy J retrades is view taken in Karmachari

We must repeat here, what we have said earlier, that there is no scientific statistical data or evidence of expert administrators who have made any study of the problem to support the opinion that reservation in excess Or 50 percent may impair efficiency. It is a rule of thumb and rules of the thumb are not for judges to lay down to solve complicated sociological and administrative problems.'' 

உச்சநீதிமன்ற வழக்கில், நீதிபதி கிருஷ்ணய்யர், நீதிபதி பசில் அலி, நீதிபதி சின்னப்ப ரெட்டி போன்ற பல நீதிபதிகள், பல தீர்ப்புகளில் எழுதிய கருத்துகள் இவை.

இந்திரா சகானி வழக்கில் 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளிலும் சொல்லியிருக்கிறார்கள். அந்தத் தீர்ப்புகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், 5 நீதிபதிகள் தங்களுடைய சிந்தனைகளைக் கொண்டு ஓட விட்டு, இதுதான் சந்தர்ப்பம் என்று சொல்லி, 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்று சொல்கிறார்கள்.

அந்தக் காலத்தில் சொல்வார்கள் பாருங்கள், ‘வேத வாக்கு', ‘வேத வாக்கு' என்று. வேதத்தைப்பற்றி கேள்வி கேட்கக்கூடாது  - நம்பு என்பதுபோன்று,

நீதிபதி சந்தோஷ் ஹெக்டே

மிக அழகாக,  கருநாடகத்தைச் சேர்ந்த உச்சநீதி மன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே என்பவர் ஒரு வழக்கில் வழங்கிய தீர்ப்பில் சொன்னதை, நீதிபதி இரத்தினவேல்பாண்டியன் அவர்கள் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

State Of Punjab vs Hiralal Case, â¡ø õö‚A™,

‘‘The extent of reservation to be made is primarily a matter for the State to decide. By this we do not mean to say that the decision of the State is not open to judicial. review. The reservation must be only for the purpose of giving adequate representation in the services to the Scheduled Castes, Scheduled Tribes and Backward Classes. The exception provided in Art. 16(4) should not make the rule embodied in Art. 16(1) meaningless. But the burden of establishing that a particular reservation made by the State is offensive to Art. 16(1) is on the person who takes the plea. The mere fact that the reservation made may give extensive benefits to some of the persons who have the benefit of the reservation does not by itself make the reservation bad. ‘‘The length of the leap to be provided depends upon the gap to be covered.'

எவ்வளவு தூரம் இட ஒதுக்கீடு இருக்கவேண்டும் என்பதை யார் முடிவு செய்யவேண்டும்? நீதிமன்றங்கள் அல்ல. தெளிவாக தீர்ப்பு இருக்கிறது. யார் முடிவு செய்ய வேண்டும் என்றால், மாநில அரசுகள்தான் என்பதற்கு விளக்கம் இருக்கிறது பாருங்கள், அரசமைப்புச் சட்டத் தினுடைய 12 ஆவது பிரிவு அடிப்படை உரிமைகளில்  இருக்கக்கூடியதில்,

அரசமைப்புச் சட்டத்தினுடைய 12 ஆவது பிரிவு

மாநில அரசு - மத்திய அரசு - உள்ளாட்சி நிர்வாகம் ஆகிய எல்லாமே அதில் வரும் என்று, அரசமைப்புச் சட்டத்தினுடைய 12 ஆவது பிரிவு, அடிப்படை உரிமைகள் இட ஒதுக்கீடு தொடங்குவதற்கு முன்னாலே, ‘‘அரசு'' (ஷிtணீtமீ) என்பதற்கு என்ன விளக்கம்? மத்திய அரசு ஆக இருக்கலாம்; மாநில அரசு ஆக இருக்கலாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்ததினால், இதை யார் முடிவு செய்யவேண்டும் என்றால், அரசுகள் முடிவு செய்யவேண்டும்.

ஆகவே, இது மிக முக்கியமான கருத்தாகும்.

ஆக, அந்த அடிப்படையில், 50 சதவிகித உச்சவரம்பு இட ஒதுக்கீடு என்பது இருக்கிறதே, இதற்கு ஓர் அரசியல் சட்ட ரீதியான அல்லது உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே இருந்த பல மூத்த நீதிபதிகள் பல கருத்துகள் சொன்ன அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லாமல் உருவாக்கிக் கொண்டதாகும்.

சில நீதிபதிகள் வலிந்து தங்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, தடாலடியாக அடிக்கலாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு  வருகிறார்கள்.

103 ஆவது அரசமைப்புச்சட்டத் திருத்தத்தின்கீழ்...

அதற்கடுத்து தோழர் கோ.கருணாநிதி அவர்கள் தெளிவாக ஒன்றைச் சுட்டிக்காட்டினார்கள்.

 69 சதவிகித இட ஒதுக்கீடு வந்தபொழுது, 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது  என்று பார்ப்பனர்கள், மற்றவர்கள் எல்லாம் சொன்னார்கள் அல்லவா? அவர்களுக்கே ‘‘முன்னேறிய ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு'' என்று மத்திய அரசு கொடுத்தவுடன், 50 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு மேலேதான், 10 சதவிகித இட ஒதுக்கீட்டை 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்கீழ் கொடுத்திருக்கிறார்களே! (60 சதவிகிதமாகிறது).

அப்படியென்றால், அதை மீறுகிறார்களே, 60 சதவிகிதமாகி விட்டதே! 50 சதவிகித இட ஒதுக்கீட்டை மத்திய அரசை - அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்மூலம் மீறியிருக்கிறார்களே - அப்படி யென்றால், 50 சதவிகித இட ஒதுக்கீடு எங்கே நிற்கிறது? அப்போது ஆட்சேபிக்கிறார்களா?

அதைச் சொன்னால், ‘அது வேறு தனி வழக்கு, பிறகு பார்க்கலாம்' என்கிறார்கள்! அந்த வழக்குத் தொடரப்பட்டு மூன்றாண்டுகள் ஆகின்றன; இது வரையில், தடையாணையும் கொடுக்கவில்லை- அந்த வழக்கும் விசாரணைக்கும் எடுத்துக் கொள்ளப்பட வில்லை.

எவ்வளவு கொடுமையான சூழல் - ஆபத்து எந்தெந்த ரூபத்தில் இருக்கிறது பாருங்கள்.

பார்வை இருந்தும், பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்

தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தவுடன், இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட வேண்டும் என்று நினைக் கிறார்கள். நம்முடைய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களாகவே இருக்கிறார்கள். பார்வை இருந்தும், பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.

எனவேதான், 50 சதவிகித இட ஒதுக்கீடு என்பதற்கு, எந்தவிதமான, நியாயப் பூர்வமான, அரசமைப்புச் சட்ட ரீதியான, தெளிவான ஆதாரங்களோ, புள்ளி விவரங்களோ இல்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பில், 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் பெரும்பான்மையான தீர்ப்பிலிருந்து, நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் எழுதிய தீர்ப்பிலிருந்து நாம் சொல்கிறோம்.

எனவே, இதற்கென்ன பதில்?

மாநில அரசுகளுக்குத்தான் மக்கள் இருக்கிறார்கள்; மாநிலத்தில் ஒரு பட்டியல்,  நீண்ட காலமாக இருக்கிறது. கம்யூனல் ஜி.. 1928 இல் இருந்து இருக்கிறது.

அதேபோன்று, அதே காலகட்டத்தில் கருநாடக மாநிலத்தில் முன்புமில்லர் கமிட்டி' போட்டு, அதிலிருந்து இட ஒதுக்கீடு மன்னராட்சியில் வந்தது.

ஆகவே, அப்படிப்பட்ட ஒரு பெரிய வர லாற்றை உடையவை மாநில அரசுகள். மாநில அரசுகளுக்குத்தான் மக்கள்; மாநில அரசுகள்தான் நேரிடையாக அந்த நிலைமைகளைப் பார்க்கிறார்கள்.

எல்லாம் சமமாக இருந்தால் ஒன்றியம் என்று சொல்லலாம்

எனவே, அரசு என்று சொல்லுகிறபொழுது, முதலில் எதை ஆராயவேண்டும் என்றால், அரசமைப்புச் சட்ட ரீதியாக என்றால், மாநில அரசைத்தான்.

ஒன்றிய அரசு என்று இப்பொழுது மொழி பெயர்க்கப்படுகிறது. ஒன்றிப் போவதில்லை எதிலும்.

இரண்டாவது, ஒரே ஒரு மாநிலம் அல்ல.

அரசமைப்புச் சட்டத்தில் முதல் வாக்கியம் எப்படி ஆரம்பிக்கிறது.

  ‘‘India, that is Bharat, shall be a Union of States''

இது பல மாநிலங்கள் சேர்ந்த ஒரு கூட்டாட்சி.

ஒன்றியம் என்கிற வார்த்தையை இப்பொழுது பயன்படுத்துகிறார்கள். ஒரு நண்பர்கூட சொன்னார், ஒன்றியம் என்பதுதான் சரியான மொழி பெயர்ப்பு என்று.

மொழி பெயர்ப்பு அடிப்படைக் கருத்தைக் கொண்ட தாக இருக்கவேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.

பஞ்சாயத்து யூனியன், பஞ்சாயத்து ஒன்றியம் என்பதைப் போல இங்கே பயன்படுத்துவது சரியல்ல.  எல்லாம் சமமாக இருந்தால் ஒன்றியம் என்று சொல்லலாம்.

சமமாக இல்லாமல், ஒன்றாக இல்லாமல் இருந்தால், அது எப்படி ஒன்றியமாகும்.  கூட்டாட்சி - திமீபீமீக்ஷீணீறீ என்ற தத்துவம் வரவேண்டும்.

பல மாநிலங்களைச் சேர்ந்த ஒரு கூட்டாட்சிதான் இந்தியா.

ஒன்றியம் என்றால், ஒற்றை ஆட்சி நடத்துவதற்கு வசதி  என்று சொல்லக்கூடிய அளவிற்கு கருத்து போகக்கூடிய ஆபத்து அந்த மொழி பெயர்ப்பில் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

பல நண்பர்கள், பத்திரிகையாளர்கள், நிபுணர்கள், கருத்தாளர்கள் இதை எடுத்துச் சொல்லவேண்டும். வெறும் மொழியாக்கம் மட்டும் இருக்கக் கூடாது; அதன் பின்னால் இருக்கின்ற கருத்தாக்கமும் முக்கியம்.

அரசமைப்புச் சட்ட வலிமை கொடுங்கள்

பொதுப் பட்டியல், பொதுப்பட்டியல் (Concurrent List)  என்று சொன்னார்கள். அது தவறு; ‘‘ஒத்திசைவுப் பட்டியல்தான்'' என்று எடுத்துச் சொன்னோம். இப்போது சொல்கிறார்கள்.

நாம் பிற்படுத்தப்பட்டோர் நிலைக்குழுவிற்காகக் கேட்டது, அரசமைப்புச் சட்ட வலிமை கொடுங்கள் என்றுதான். ஷெட்யூல்டு காஸ்ட், ஷெட்யூல்டு டிரைப் அவற்றிற்குக் கொடுத்ததுபோல கொடுங்கள்.

அப்படியில்லாமல், நாங்களே (மத்திய அரசே) வைத்துக்கொள்வோம்; நாங்கள்தான் முடிவு செய் வோம். நீங்கள் வேண்டுமானால், தபால் போடலாம் அவ்வளவுதான்  என்கிறார்கள்.

இந்த அதிகாரத்தையே தூக்கி அவர்கள் வைத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு, மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய மிகப்பெரிய ஆபத்து இதிலே வந்திருக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியம்.

மாநிலங்களுக்குத்தான் உரிமை. மாநிலங்களுக்கு உரிமை இல்லை என்று சொல்லிவிட்டால், எல்லாமே அடிபட்டுப் போகும்.

குறிப்பாக உங்களுக்குச் சொல்லவேண்டுமானால், இங்கே நண்பர் கருணாநிதி அவர்கள் மிகத் தெளிவாக சொன்னதுபோல,

102 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தில் மிக முக்கியமானது என்னவென்று சொன்னால், 342 ஆவது பிரிவு என்ற ஒன்றை உருவாக்கினார்கள்.

அந்த 342-  ஆவது பிரிவைப்பற்றித்தான் இங்கே கருணாநிதி அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துச் சொன் னார்கள்.

திராவிடர் கழகத்தை அழைத்துகருத்தைக் கேட்டார்கள்!

அந்த 342- என்ற பிரிவை நிறைவேற்றியதைப்பற்றி அவர்கள் சொன்னாலும், 2018 இல் நாம் எப்படி மறுத்தோம்? ‘மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடியதாக இருக்கிறதுஎன்று நாம் இப்பொழுது சொல்லுகிறோம் என்று யாரும் கருதக் கூடாது என்பதற்காகத்தான்செலக்ட் கமிட்டி'யிலேயே, அதிகாரப்பூர்வமாக இட ஒதுக்கீட்டில் தெளிவான கருத்தைச் சொல்லக்கூடியவர்கள் என்ற முறையில், நம் கருத்தை அழைத்துக் கேளுங்கள் என்று சொல்லி, திராவிடர் கழகத்தை அவர்களே அழைத்து, கருத்தைக் கேட்டார்கள்; கேட்கும்படி உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

அதன்படி. அப்பொழுது உறுப்பினர்களாக இருந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கனிமொழி அவர்களும், .தி.மு.. சார்பில் நவநீதகிருஷ்ணன் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் டி.கே.ரங்கராஜன் அவர்களும், முற்போக்குக் கருத்துள்ளவர்களும், கருநாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஹரிபிரசாத்  போன்றவர்கள் இருந்தார்கள். பூபேந்திர யாதவ் (பா...) அந்தக் குழுவின் தலைவராக இருந்தார்.

அந்தக் கமிட்டியில் முதலாவதாக நாம் சொன்ன வற்றைத்தான் இங்கே கருணாநிதி அவர்கள் சொன்னார். அதை மீண்டும் நான் இங்கே சொல்லவேண்டிய அவசியமில்லை.

ஆனால், எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, கடைசியில் அவர்கள் என்ன சொன்னார்கள், பிற் படுத்தப்பட்ட மக்கள் என்று வரையறை செய்வது யார் என்று சொன்னால், 342- பிரிவின்படி, அதாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 102 ஆவது என்று வந்திருக்கிறதே, அந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, மத்திய அரசுதான் என்ற அளவில் வந்தார்கள்.

‘‘பெரியார் கண்ணாடியைப்'' போட்டுப் பார்க்கவேண்டும்!

முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாகக் கொண்டு வந்த அந்த மாநில உரிமைகள் அறவே பறிக்கப்படுகின்றன. பெரிய ஆபத்து அது. அடிப்படையிலேயே ஆபத்து இருக்கிறது.

இதை மிக ஆழமாகப் பார்த்தால்தான் சட்ட ரீதியாக விளங்கும். அந்த ஆபத்து முதலில் தெரியாது. ‘‘பெரியார் கண்ணாடியைப்'' போட்டுப் பார்க்கவேண்டும்!

நம் மக்களுக்கு என்ன நினைப்பு, கடைசி வீட்டில்தானே தீப்பிடிக்கிறது - மராத்தா வழக்கில்தானே தீர்ப்பு வந்திருக்கிறது - அது அவர்கள் பிரச்சினை என்று நினைப்பார்கள்.

(தொடரும்)

No comments:

Post a Comment