சென்னை, மே 8 இந்தியாவின் மிகப் பெரிய நேரடி வீட்டு வினியோக விற்பனையை பிக் பஜார் நிறுவனம் நடத்துகிறது.
இதன்படி, நடப்பு மே மாதம் நேரடி வினியோகம் நடைபெறும். இந்தத் திட்டத்தின் அடிப்படையே, வாடிக்கையாளர்கள் எங்கிருக்கிறார்களோ, அங்கேயே அவர்களது வாழ்க்கை தேவைகள் மற்றும் தேர்வுகள் கிடைக்கும் வகையில் எளிமையாக்குவதுதான்.
இந்த விற்பனை மூலம் ஒரு வாடிக்கையாளர் வீட்டில் இருந்தபடியே, தனது தேவைகள் அனைத்தையும் 2 மணி நேரத்திற்குள், சேவைக் கட்டணம் எதுவும் இல்லாமல் பெற்றுக் கொள்ள இயலும்.
இதற்காக பிக் பஜார் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களுக்கு ஏற்றவாறு உருவாக்கியுள்ள சிறப்பு மொபைல் அப்ளிகேஷன் மூலமோ, இணையத்தில் இணைய முகவரியை அணுகியோ ஆர்டர் செய்யலாம் என இந்நிறுவன வணிக அதிகாரி பவன் சர்தா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment