கரோனா ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 14, 2021

கரோனா ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை, மே 14 -பதிவு உள்ளிட்ட சந்தேகங்களுக்காகவும் கரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் பிற மருந்துகளை எடுத்துச்செல்ல உதவி கேட்டும் இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 சென்னையில் கரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் கரோனா தொடர்பான ஆலோசனைகளை பெறுவதற்கு சென்னை மாநகர காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் கரோனா தொடர்பான உதவிகளுக்கு 9498181236, 9498181239 ஆகிய எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

24 மணிநேரமும் செயல்படும் இந்த எண்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டுப் பெறலாம்.

-பதிவு உள்ளிட்ட சந்தேகங்களுக்காகவும் கரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் பிற மருந்துகளை எடுத்துச்செல்ல உதவி கேட்டும் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச்செல்வதற்கு உதவிகள் கேட்டும் மேற்கண்ட எண்களில் தொடர்புகொள்ளலாம்.

காவல்துறையினர் இதுபோன்ற நேரங்களில் தேவையான உதவிகளை செய்வதற்கு தயாராக உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment