பேராசிரியர் அரசு செல்லையா
மேரிலாந்து பல்கலைக்கழகம், பால்டிமோர், அமெரிக்கா
கோவிட்
பெருந்தொற்றின் பேரிடர்களை உலகின் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு வகையில் கடந்து வருகிறது. ஏராள உயிரிழப்பு, உடல் நலிவு, தனி மனித, குடும்ப பொருளாதார சீர்குலைவு, தொழில்கள் நசிவு என இழப்புகள் சொல்லிமாளா
ஒரு ரோமத்தின் ஆயிரத்தில் ஒரு பங்கு பருமன் கொண்ட ஒரு வைரஸில் நடந்த சில மாற்றங்கள், இந்த பேரழிவுக்கு வழி வகுத் திருக்கிறது.
ஆனால்
மானுடம் சந்திக்கத் துவங்கிவிட்ட, மானுடமே உருவாக்கிய, சூழியல் பேரிடர்களால் வர இருக்கும் பெருந்துன்பமும்
பேரிழப்பும் இன்னும் முழுமையாக உணரப் படாமல் இருக்கிறது.
இந்த
கட்டுரைத் தொடரில் சூழியல் பேரிடரின் முக்கிய கூறுகள், அவற்றின் காரணிகள், தீர்வுகள் பற்றி சில காண்போம். சூழியல் பேரிடர் பற்றிய உண்மை செய்திகள் மக்களை சென்றடைந்து, தயார் நிலைக்கு வர இதுபோன்ற பல்லாயிரக்கணக்கான
கட்டுரைகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடைபெறவேண்டும். சூழியல் பேரிடரை சமாளித்து முன் செல்ல - சரியான திட்டங்கள் தீட்டப் படவேண்டும். அத்திட்டங்கள் வேகமாகவும், திறமையாகவும் செயல்படுத்தப் பட வேண்டும்.
சூழியல்
பேரிடர் அளவு பற்றி சொல்லவேண்டுமென்றால், கோவிட் பெருந்தொற்றினை ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள் ளலாம். சூழியல் பேரிடரை நன்கு புரிந்து, சரியான நோக் கில் மிகப் பெரும் முடிவுகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப் படாவிட்டால், இன்னும் 10 ஆண்டுகளில் தற்போது கோவிட் தொற்றால் ஏற்பட்டிருக்கும் துன்பத்தைப் போல 10 மடங்கு துன்பத்தை சூழியல் பேரிடர் உண்டாக்கும்.
இதனைச்
சொல்வதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது?
1977ஆம்
ஆண்டு துவங்கி மானுட தலையீட்டால், இயற்கை வளங்களுக்கு ஏற்படும் சிதைவுகளை அவ தானித்து வருகிறேன்.
31 ஆண்டுகள் இந்தியாவிலும், 36 ஆண்டுகள் அமெரிக்காவிலும் வாழ்ந்ததால் நேரடியாகவும் பருவ நிலை மாற்றங்களையும், பிற சூழியல் சிக்கல்களையும் அறிந்து வருகிறேன். இதுபற்றி வெளிவரும் அறிவியல் பூர்வமான செய்திகள், வெளியீடுகளையும் முடிந்தவரை படித்து வருகிறேன். சூழியல் தொடர்பாக ஆழ்ந்து சிந்திப்பவர்களின் சிந்தனைகளையும் அறிந்து வருகிறேன். விவரம் தெரிந்த நாளிலிருந்து நான் கண்டவற் றையும், அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் வைத்தே 10 ஆண்டுகளுக்குள் தாக்கப்போகும் சூழியல் பேரிடர், கோவிட் பெருந்தொற்றினைப் போல் 10 பங்கு துன்பம் தர வாய்ப்பிருக்கிறது என கூறுகிறேன்.
10 ஆண்டுகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்போ அல்லது பின்போ இந்த பெருந்துன்பம் மானுடத்தை தாக்கலாம். துன்பங்களின் தாக்கம் 10 மடங்குக்கு குறைவாகவோ அல்லது கூடுதலா கவோ இருக்கலாம்.
பெரும்
போர், பெரும் பஞ்சம், பெருந்தொற்று என கோடிக்கணக்கான மக்கள்
அல்லலுறும் துன்பங்களை மானுடம் கடந்த காலங்களில் சந்தித்திருக்கிறது. ஏன், இந்த வைரஸ் தொற்று பேரிடர் கூட, 1918ஆம் ஆண்டு (Spanish flu) 5 கோடி
மக்களை கொன்றிருக்கிறது. அப்போதிருந்த நிலையை விட தற்போது உலகளாவிய பொது சுகாதாரம், மருத்துவம், தடுப்பூசி உருவாக்கல் போன்ற துறைகளில் மிகப் பெரும் முன்னேற்றமடைந்திருக்கிறது.
ஆயினும் தற்போதைய கோவிட் பெருந்தொற்றினை அடையாளம் கண்டு விரைவில் களைய முடியவில்லை. லட்சக்கணக்கான உயிரிழப்பை தடுக்க முடியவில்லை.
எனவே
சூழியல் பேரிடரின் கூறுகள் என்ன, பரிணாமம் என்ன, காரணிகள் என்ன, தடுப்பதெப்படி என்பதை யெல்லாம் உலகின் ஒவ்வொரு மனிதரும் தொடர்ந்து அறிந்துவரவேண்டும். தன்னாலியன்றவற்றை செயலில் இறங்கவேண்டும்.
1977ஆம்
ஆண்டிலிருந்தே நான் மானுட செயல்பாடுகளால் சூழலுக்கேற்படும் சிக்கல்களை உணர துவங்கியிருந்தேன். அப்போதிலிருந்து வெளிவரும் செய்திகளை தொடர்ந்து அறியவும், உணரவும் எனக்கு உதவியது நான் 1972ஆம் ஆண்டு துவங்கி உயிரியல் துறைகளில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, முனைவர் பட்ட ஆய்வு, மூலக்கூறு உயிரியலில் மேற்கொண்ட ஆய்வும் ஆகும்.
அப்படி
என்னதான் மானுட தலையீட்டால் சூழியல் பேரிடர் வரத் துவங்கிவிட்டது? இன்னும் மிகப்பெரும் அளவில் இனிமேல் வர என்ன இருக்கிறது?
தன் வாழ்வின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து வளர்ச்சியுற்று வரும் மானு டம், அப்படி என்னதான் தவறாகச் செய்துகொண்டிருக்கிறது, இப்படி ஒரு பேரிடரை உருவாக்க? இதுவரை இப்புவியில் தோன்றிய உயிரினங்களில் (Species) 99% அழிந்து போயிருப்பதற்கான சுவடுகளை அறிவியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். ஏன், நமது மனித வகையில்
(Genus - Homo) அடங்கிய இனங்கள் (Species) பலவும் அழிந்திருக்கின்றனவே?
Britannica இணைய தளத்தில் <https://www.britannica.com/topic/Homo> இது தொடர்பாக கொடுக்கப்பட்ட செய்தியை அப்படியே கீழே தருகிறேன்.
Homo, genus <https://www.britannica.com/science/genus-taxon> of the family Hominidae <https://www.britannica.com/animal/Hominidae> (order Primates <https://www.britannica.com/animal/primate-mammal>) characterized by a relatively large cranial capacity, limb structure adapted to a habitual erect posture and a bipedal gait, well-developed and fully opposable thumbs <https://www.britannica.com/science/thumb>, hands capable of power and precision grips, and the ability to make standardized precision tools <https://www.britannica.com/technology/tool>, using one tool to make another. Together with modern humans <https://www.britannica.com/topic/human-being>, Homo sapiens <https://www.britannica.com/topic/Homo-sapiens>, the genus includes the extinct species <https://www.britannica.com/science/species-taxon> H. habilis <https://www.britannica.com/topic/Homo-habilis>, H. erectus <https://www.britannica.com/topic/Homo-erectus>, and H. heidelbergensis <https://www.britannica.com/topic/Homo-heidelbergensis> as well as the Neanderthals <https://www.britannica.com/topic/Neanderthal> (H. neanderthalensis), the early form of Homo sapiens <https://www.britannica.com/topic/Homo-sapiens> called Cro-Magnon <https://www.britannica.com/topic/Cro-Magnon>, and the enigmatic <https://www.merriam-webster.com/dictionary/enigmatic> H. naledi <https://www.britannica.com/topic/Homo-naledi>.
இதுவரை
இவ்வுலகில் வாழ்ந்த 99% உயிரினங்கள் மறைந்துவிட்டன. மனித இனத்தில் தோன்றிய 5 இனங்கள் மறைந்துவிட்டன. மனித இனத்தில் (genus - Homo) எஞ்சி இருக்கும் தற்கால மனித இனம் (Homo Sapiens) அதாவது “நாம்” எந்த வகையில் தனித் தன்மை கொண்ட வர்கள்? பரிணாம வளர்ச்சியில் மூளையில் ஏற்பட்ட ஒரு மாற்றம் (Cognitive Revolution) மட்டுமே நமது தனித் தன்மையை கொடுத்தது. அந்த மாற்றம்தான் தற்கால மனித இனம் கைக்கொண்டிருக்கும் - நெருப்பு, பேச்சு, எழுத்து, கருவிகள், விவசாயம், தொழில் வளர்ச்சி, சமுதாய கூட்டுறவுகள் அனைத்துக்கும் காரணம்.
மற்ற
எல்லா விலங்குகளையும் வென்றிடும் ஆற்றலை சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கால மனித இனம் பெற்றதற்கும் இந்த மாற்றமே காரணம். பிற உயிரினங்களால் தாங்க இயலா சூழியல் கூறுகளை தாங்கவும், அவற்றை பயன்படுத்தவும் இதுவே காரணமா யிற்று. அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம், பெருமளவு உணவு உற்பத்தி என தன்னை மேம்படுத்தி
உலகெங்கும் பரவி பெருகவும் இதுவே காரணம்.
இதனால்
மானுடம் அடைந்த வளர்ச்சியும், பெற்ற அறிவும் அளப்பரியன. எந்த ஆற்றல் ஆக்கத்துக்கு வழி வகுத்ததோ, அதே ஆற்றல் உலகின் பிற உயிரினங்களுக்கும், இயற்கை வளங்களுக்கும் அழிவையும் சிதைவையும் ஏற்படுத்த துவங்கிவிட்டன. இந்த அழிவினை மனித இனம் பெருமளவில் உருவாக்கிவருவது, கடந்த 200 ஆண்டு களாக என்றாலும், மனித இனத்தின் அழிவு சுவடுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆதாரத்துடன் அம்பலமாகி இருக்கின்றன.
தற்போது
மானுட தலையீட்டின் தாக்கம், மனித இனத்தின் அழிவுக்கே வழிவகுக்குமளவுக்கு பெருகி இருக்கிறது. இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குள் நமது இனம் (Homo Sapiens) முற்றிலும் உலகில் துடைத்தெறியப் பட நாமே காரணமாகிக்கொண்டிருக்கிறோமோ
என தோன்றுகிறது. தமது செயல்பாடுகளாலேயே தம்மை அழித்துக்கொள்ளும் முதல் உயிரினம் நம் மனித இனமாகத் தான் இருக்கும். அப்படி நடந்துவிட்டால், நமக்கு பின்னர் அறிவாற்றலுடன் தலையெடுக்கும் ஓர் உயிரினம் “நமது அடி முட்டாள்தனத்தை” அறிந்து சிரிக்கலாம், பாடம் பெறலாம்.
அப்படி
என்னதான் சூழியல் பேரிடர் என நாம் கருத
வேண்டியிருக்கிறது?
சிலவற்றை
இங்கு பார்ப்போம்.
1) மானுட
தலையீட்டால் உலகில் நிகழ்ந்து கொண்டி ருக்கும் ஆறாம் மிகப் பெரும் உயிரின அழிவு (Sixth mass extinction of all living species). முதல் அய்ந்து மிகப் பெரும் உயிரின அழிவு இயற்கையில் விளைந்தவை. இப்போது நடந்துகொண்டிருக்கும் ஆறாம் பேரழிவு மானுட தலையீட்டால் நிகழ்வது. இந்த உயிரினப் பேரழிவு அல்லது இழப்பு (Mass extinction), நமது மானுட வாழ்க்கையை எப்படி எப்போதிலிருந்து சிதைக்கும் என இன்னும் துல்லியமாக
கணிக்க முடியவில்லை.
2) உலகை
வெப்பமயமாக்கும் வாயுக்கள் மானுட செயல்பாடுகளால் தொடர்ந்து மிகப் பெருமளவில் வெளி யிடப்படுவது. அதனால் துருவப் பனி உருகி கடல் மட்டம் உயருவது. பருவக் காற்று, புயல், மழை இவற்றில் பெரும் மாற்றங்கள்.
3) கழிவுகளையும்,
குப்பைகளையும் புவி தாங்க இயலா அளவுக்கு கடலிலும், தரையிலும் கொட்டிக்கொண்டிருப்பது
4) காடுகள்
அழிக்கப்படுவதாலும், உணவுக்காக மிக நெருக்கி வளர்க்கப்படும் விலங்குப் பண்ணைகளாலும் - நுண்ணுயிரி பெருந்தொற்று பேரிடர்கள். 1918 மற்றும் 2000 வைரஸ்
பெருந்தொற்றினைப் போல இனி அடிக்கடி நிகழ வாய்ப்பிருக்கிறது.
மேற்சொன்ன
ஒவ்வொன்றையும் அதனை விளைக்கும் காரணிகளையும், அவற்றைத் தடுப்பது பற்றியும் வரும் வாரங்களில் காண்போம்.
- தொடரும்


No comments:
Post a Comment