பீகாரில் கணக்கில் காட்டப்படாத 75000 மரணங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 20, 2021

பீகாரில் கணக்கில் காட்டப்படாத 75000 மரணங்கள்

புதுடில்லி, ஜூன் 20- பீகார் மாநிலத்தில் கரோனா இரண்டாவது அலை கடும் பாதிப்புகளை ஏற் படுத்தி வந்த காலகட்டத் தில், அதாவது இந்த ஆண் டின் முதல் 5 மாதங்களில் 75,000 பேர் மரணம் அடைந் துள்ளனர். ஆனால், இந்த இறப்புகளுக்கான கார ணங்கள் விவரிக்கப்பட வில்லை என சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன. இந்த இறப்பு எண்ணிக் கையானது, அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ கரோனா மர ணங்களை விட 10 மடங்கு அதிகம் ஆகும்.

2021 ஜனவரி-மே மாதங் களில் கரோனாவால் ஏற் பட்ட இறப்பு எண்ணிக்கை 7717 என அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்திருந் தது. இது, இந்த மாத தொடக்கத்தில் 3951 இறப் புகள் கூடுதலாக சேர்க்கப் பட்டு திருத்தப்பட்ட புள்ளிவிவரம் ஆகும். இந்த மரணங்கள் எப்போது நிகழ்ந்தன என்று அதிகாரி கள் குறிப்பிடவில்லை என் றாலும், அவை 2021இல் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அப்போதும்கூட, மாநிலத்தில் ஒட்டு மொத்த அதிகாரப்பூர்வ கரோனா மரணங்களின் எண்ணிக் கையானது, பதிவுத்துறை யால் பதிவு செய்யப்பட்ட அதிகப்படியான இறப்புக ளில் ஒரு பகுதிதான். துல் லியமாக 74,808 மரணங் கள் கூடுதல் பதிவாகியுள்ளது.

இதை வைத்து பார்க் கும்போது கரோனா மர ணங்களை அரசு குறைத்து காட்டுகிறதா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

No comments:

Post a Comment