டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்காக ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள துறைமுக மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு 9 மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ் நாடு அரசு விவசாயத்திற்கு தனி வரவு செலவு அறிக்கை, நீர் நிலை மேலாண்மைக்கு தனி அமைச்சகம், வெளிப்படைத் தன்மையுடன் அரசின் முடிவுகள் இதனுடன் உலகப் பொருளாதார வல்லுனர்கள் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழு இவை அனைத்தும் சிந்தனைகள் செயலாக்கப்படும் என்கிற நம்பிக்கையை தந்துள்ளது என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மாநிலங்களின் கருத்தை கேட்டறிந்த பின்னர் பாடத் திட்டங்களை ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரிக்கும் என மோடி அரசின் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* முந்தைய பாஜக அரசு பள்ளி மாணவர்களுக்கு கொண்டு வந்த ஆர்.எஸ்.எஸ். உடை போன்ற காக்கி உடையை நீக்கிவிட்டு புதிய சீருடையை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க கேலாட் தலைமையிலான ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
தி டெலிகிராப்:
* லட்சத்தீவில் பள்ளிகளில் மதிய உணவில் மாட்டி றைச்சி மற்றும் கோழி உணவை நீக்கி சிறப்பு அதிகாரி படேல் பிறப்பித்த ஆணைக்கு கேரளா உயர் நீதிமன்றம் தடை விதித்து, பழைய உணவு முறை தொடரும் என்று தீர்ப்பளித்துள்ளது. அதே போன்று, சமீபத்தில் மூடப்பட்ட பால் பண்ணைகளில் இருந்து மாடுகளை ஏலம் விடுவதற்கும் தடை விதித்துள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment