தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுத் துணைத் தலைவராக பேராசிரியர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம்
தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுத் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்களையும், பேராசிரியர் இராம. சீனுவாசன் அவர்கள் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு. தீனபந்து (இ.ஆ.ப, (ஓய்வு), டி.ஆர்.பி. இராஜா (மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்), மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு. சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோரை பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்.
பல்துறை சான்றோர் - கல்வியாளர் - கலைத்துறை - தொழிற்துறை வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைத்தன்மூலம் தமிழ்நாடு வளர்ச்சி சிறப்பான இலக்கு நோக்கிச் செல்வது உறுதியாகும்!
கி.வீரமணி
திராவிடர் கழகம்
சென்னை
6.6.2021

No comments:
Post a Comment