வாழ நினைத்தால் வாழலாம்!
* காஷ்மீரில் 124 வயது ரெஹடிக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
>> விஞ்ஞானம் மேலும் மேலும் வளரும்போது சாவதுதான் கஷ்டமாகும்.
நிரந்தரமாக மூடலாமே!
* மறு ஆணை வரும்வரை டாஸ்மாக்கைத் திறக்கக்கூடாது.
- மேலாண் இயக்குநர்
>> குடிப்பது பழக்கம் என்றால், குடியை நிறுத்துவதும் பழக்கம் என்ற நிலை வரலாம் அல்லவா!
வீர வணக்கம்!
* இந்தியாவில் இரண்டாவது அலையில் 646 மருத்துவர்கள் உயிரிழப்பு.
>> உயிரைக் காப்பாற்றப் போய் உயிரைப் பணயம் வைத்த உண்மைத் தியாகிகள்!
இரு துருவமோ!
* ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சந்திப்பு - பரபரப்பு.
- பத்திரிகை செய்தி
>> ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பது பரபரப்பா? சரியான தமாஷ்!
யாக அர்ச்சகருக்குத் தடுப்பூசி போட்டாச்சா?
* கரோனாவிலிருந்து விடுபட திருவொற்றியூர் சிவா - விஷ்ணு கோவிலில் சிறப்பு யாகம்!
>> சிறப்பு வருமானம் - பார்ப்பனர்களுக்கு!
No comments:
Post a Comment