ராம், ராம்!
* உ.பி.யில் தலித் மணமகன் குதிரையில் ஊர்வலம் போனால் கொன்று விடுவோம் என்று அச்சுறுத்தல்.
>> கழுதையில் போனால் அனுமதிப்பார்களோ!
‘ஜூம்' என்ன யாகத்தின் கண்டுபிடிப்பா?
* உலக நன்மைக்காக கோடி ஹரே ராம நாம ஜபம் - ஆன்லைன் ஜூம் வழியாக கடையநல்லூரில்...
>> எங்கு சாவு விழுந்தாலும்கூட கருமாதிச் சுரண்டல் தடபுடல்தானே!.
கல்விக் கண்திறப்பு
* நரிக்குறவப் பெண் கேட்டது தையல் மிஷின் - கிடைத்தது கல்லூரி வாய்ப்பு - அமைச்சர் சிவசங்கரால்.
>> அமைச்சர் ஒரு பெரியாரிஸ்ட் என்பதை நிரூபித்துவிட்டார்.
‘அப்பாடா!'
* புதுச்சேரி மாநிலத்தில் ஒரு மாதத்துக்குப் பின் வரும் 14 ஆம் தேதி பதவி ஏற்பு!
>> விரைவில் திடுக்கிடும் திருப்பங்களைக் காணலாம்!!
No comments:
Post a Comment