பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவரான டாக்டர் காமேசுவரன் அவர்கள் (வயது 97) இன்று காலை மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயர மும், வேதனையும் அடைகிறோம்.
இத்துறையின் மூத்த மருத்துவ ரான அவர் தலைசிறந்த பண்பாளர்; மனிதநேயத்துடன் நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்து பிரபலமானவர். தமிழ் மொழி, கலை, நாகரிகம் இவைகளில் மறைந்தும் மறையாதவரான அவர்தம் வாழ்விணையரும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தருமாகிய டாக்டர் லலிதா காமேசுவரன் அவரைப் போலவே, மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
சமூக நீதி அனைவருக்கும் கிட்ட வேண்டும் என் பதை ஆழமாகவும், அடக்கமாகவும் ஒரு தொண்டாகக் கருதி செய்து வந்தவர். ஈடு செய்ய இயலாத இழப்பு இது!
அவரது குடும்பத்திற்கு இது எத்தகையதொரு சோகம் மிக்க இழப்போ, அதுபோல நமக்கும் பெரிய இழப்பு ஆகும். எனக்கு அவர் பல்லாண்டு மருத்துவம் பார்த்து வந்தவர் என்பதே முக்கிய காரணம்.
தந்தை பெரியார் அவர்கள் டாக்டர் காமேசுவரன் அவர்களை சந்திக்கும்போது “இவர் வீரமணியின் டாக்டர்" என்றே அவரை அன்புடன் பிறருக்கு அறிமுகப்படுத்துவார். நிறைவாழ்வு வாழ்ந்தவர்.
அவரது குடும்பத்தவர்கள், அவரது அன்புச் செல்வர் டாக்டர் மோகன் காமேசுவரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தவரான திருமதி இந்திரா, திருமதி சித்ரா, டாக்டர் சுப்ரமணியம் ஆகியோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர் களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.6.2021

No comments:
Post a Comment