கரோனா என்னும் கொடு நோயின் தாண்டவம் தலைதூக்கி நிற்கும் தருணத்திலும் தந்தை பெரியாரின் தத்துவக் கொள்கைப் பிரச்சாரத்துக்குத் தங்கு தடை ஏற்பட்டு விடக் கூடாது - குறிப்பாக, இளைஞர்கள், மாணவர்களின் சிந்தனைகளில் 'ஒட்டடை' படிந்துவிடக் கூடாது என்ற நோக்கில் காணொலி மூலம் கருத்துப் பரப்புரை வகுப்புகளாக மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தை திராவிடர் கழகத் தலைவர் அறிவித்தார்.
பெரியார்
மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் இணைந்து நடத்தும் திட்டமிது.
இந்தப்
பயிற்சி வகுப்பில் பங்கு பெறும் இருபால் மாணவர் களுக்கும் பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படுவது - இந்தத் திட்டத்தின் சிறப்பை மேலே உயர்த்தக் கூடியதாகும்.
பல்கலைக்கழகத்தின்
வேந்தர் - திராவிடர் கழகத் தலைவர் அறிவித்த அற்றைத் தருணத்திலேயே கழகப் பொறுப்பாளர்கள் வாயு வேகத்தில் அதற்கான பணியில் இறங்கி, திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தத் தொடங்கி விட்டனர். ஜூன் மாதம் இரண்டாம் தேதியே தருமபுரி மண்டலத்தில் தொடங்கப்பட்டது. இன்னும் சில நாள்களிலேயே முதற்கட்டக் காணொலி நிறைவு பெற உள்ளது.
திராவிட
இயக்கம் சார்ந்த பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப்பட்டன.
வகுப்பின்
நேரம் 45 மணித்துளிகள், மாணவர்களின் கேள்வி களுக்கான காலம் 30 மணித்துளிகள்.
இயக்க
வரலாற்றில் எத்தனை எத்தனையோ புகழ் பூத்த அத்தியாயங்கள் உண்டு. அதுவும் பயிற்சிப் பட்டறை என்பது திராவிடர் கழகத்திற்கே உரித்தான 22 காரட் முத்திரையாகும்.
தந்தை
பெரியார் அவர்களின் காலத்திலேயே கோடை விடுமுறை நாள்களில் ஈரோட்டில் இத்தகைய பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் பயிற்சி பெற்றவர்தான் - இன்றைய நமது கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.
நமது
தலைவர் ஆசிரியர் அவர்கள் வெறும் மேடைப் பேச்சாளர் அல்லர். அடிப்படையில்
களப் பணியாளர். இத்தகு பயிற்சிகள் அவருக்கு இளம் வயதிலேயே வாய்க்கப்பட்டதால்தான். தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் ஓர் இயக்கத்தின் எழிலை எழுச்சியை நேர்த்தியோடு நெய்து கொண்டு இருக்கிறார்.
பயிற்சிப்
பட்டறை என்பது திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை அதன் பணியில் தொடர் நிகழ்வாகும். ஏனெனில் இது ஓர் எழுச்சிமிகு
சித்தாந்த இயக்கம். மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியாரால் முக்கால் நூற்றாண்டுக்கு மேல் இந்த மண் திராவிட சித்தாந்தத்தால் - பக்குவப்படுத்தப்பட்ட மண். அதுதான் இன்றைய செழுமைக்கு விழுமிய காரணமாகும்.
அதற்கு
எந்தச் சூழ்நிலையிலும் தொய்வு ஏற்பட்டு விடக் கூடாது என்பதால் இந்த கடும் கரோனா தாக்குதல் தருணத்திலும்கூட சித்தாந்த வகுப்புகள் செவ்வனே சீருடன் நடைபெற்றுக் கொண்டுள்ளன. பெறற்கரும் இந்த வாய்ப்பை பெற்றுள்ள இரு பால் இளைஞர்களும், மேலே மேலே இந்தத் திசையில் தங்களைக் கூர்மைப்படுத்திக் கொண்டால் தனி வாழ்விலும், பொது வாழ்விலும் ஓங்கிப் பரிணமிக்க முடியும்
வேறு
எங்கும் கிடைத்திராத இந்த வாய்ப்பினை திராவிடர் கழகம் உருவாக்கிக் கொடுத்துள்ளது. இலட்சியமில்லாத வாழ்க்கை சாறு இழந்த வெறும் சக்கைகளுக்குச் சமம் அறிவுப்புலத்திற்குத் தேவையான இந்தச் சத்தான உணவை இளைஞர்கள் உவப்புடன் ஏற்று மேலே ஏறு, ஏறுக என்று வாழ்த்துகிறோம்.
மண்டலங்களின்
நிறைவு விழாவிலும் திராவிடர் கழகத் தலைவர் நிறைவுரை வழங்குகிறார். கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற தருமபுரி, சேலம், ஈரோடு மண்டலங்களுக்கான நிறைவு விழாவில் பங்கேற்று நிறைவுரை வழங்கிய திராவிடர் கழகத் தலைவர் சில முக்கிய அறிவிப்புகளையும், வழிகளையும், கருத்துகளையும் வழங்கினார்.
"எந்த
ஒரு திறமையும் வெளிப்பட வேண்டுமானால் அதற்கு வாய்ப்புகள் தேவை. அத்தகைய வாய்ப்பினை அளிக்கும் ஏற்பாடுதான் இந்தப் பயிற்சி வகுப்பு! கல்வி என்பது - ஒன்றைத் திறந்து உள்ளே வைப்பதல்ல; எல்லோருக்கும் அறிவும் உண்டு, திறமையும் உண்டு, அவற்றை வெளியே கொண்டு வருவதுதான் முக்கியம் (Pulling Out)"
என்று குறிப்பிட்ட கழகத் தலைவர் 1927இல் தந்தை பெரியார் பேசிய கருத்தை எடுத்துக்காட்டினார்.
அந்தவுரை
"பகுத்தறிவுச் சுடர் ஏந்துவீர்!" என்ற நூலாகவும் வெளி வந்துள்ளது.
"கேள்விகளை
ஆசிரியர்கள் மாணவர்களைக் கேட்கக் கூடாது; மாணவர்கள்தான் ஆசிரியர்களிடத்தில் கேள்விகளை கேட்க வேண்டும்" என்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கருத்தினை மிகவும் பொருத்தமாகக் கூறினார்.
இப்பொழுது
நடக்கும் பெரியாரியல் பயிற்சி வகுப்பில்கூட வகுப்பு 45 நிமிடம் என்றால் மாணவர்களுக்கான கேள்வி நேரம் 30 நிமிடம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பயிற்சி
வகுப்பு மாணவர்களுக்கு சில அறிவிப்புகளைக் கழகத் தலைவர் கொடுத்தார்.
"இயக்க
நூல்கள் 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் கொடுக்கப் படும். பயிற்சி மாணவர்களைக் கழகம் சுவீகரித்துக் கொள்ளும், கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளில் தேவையான வகையில் உதவிகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
தாராளமாக
நிதி உதவி செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள் - இப்பொழுதே உதவி செய்யவும் தொடங்கி விட்டனர். தனி நிதியத்தை இதற்கென உருவாக்குவது பற்றி சிந்திப்போம்!
பெரியார்
பண்ணையின் திராவிட நாற்றுகள் நீங்கள். நாட்டில் நாற்றுத் திருடர்களும் உண்டு. நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இயக்கத்திற்கும், நாட்டுக்கும் பயன்பட வேண்டும்" என்று கூறினார்.
கழகப்
பொறுப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
இந்தப்
பெரியார் பண்ணையின் திராவிட நாற்றுகளைக் கண்ணின் இமைபோல் காத்து அடுத்த தலைமுறையினரை கழகத்துக்கு ஒப்படையுங்கள் என்பதுதான் நமது கனிவான வேண்டுகோள்! நமது உழைப்பும், முயற்சியும், செலவும் பயனுடையது என்பதற்கு அதுதான் அர்த்தமாகும்!
No comments:
Post a Comment