புதுச்சேரி, ஜூலை 29- சுயமரியாதை சுடரொளி புதுவை மு.ந.நடராசன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி 24.7.2021 அன்று காலை 10 மணி அளவில் புதுச்சேரி செல்லான் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முதலாவதாக அவரது படம் அலங்கரிக்கப்பட்டு வருகை தந்த அனைவரும் மலர் தூவி மரியாதை செய்தனர். புதுவை மு.ந.நடராசன் அவர்களின் மூத்த மகன் பொறியாளர் மு.ந.ந.பாஸ்கரன் முன்னிலை வகித்து தந்தையின் நினைவுகளையும், தமது குடும்பத்தையும், உறவுகளின் குடும் பத்தையும், உயர்த்தியதையும், குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் அல்லாது மற்றவர்களையும் தந்தை பெரியார் கொள்கைகளை ஏற்று செயல்பட வேண்டும் என விரும்பினார். அதன்படியே நாங்கள் செயல்படுகிறோம் என பெருமையுடன் குறிப்பிட்டு உரையாற்றினார்.
புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி தலைமை தாங்கினார். நினைவேந்தல் உரையாற்றியோர்: புதுச்சேரி மண்டல தலைவர் இரா.சடகோபன், கவிஞர் மார்கரெட் நிக்கோலஸ், பெரியார் பெருந்தொண்டர் கோ.கிருஷ்ணராஜ், புதுச்சேரி மண்டல பகுத்தறிவாளர் கழக தலைவர் கைலாச நெ.நடராசன், புதுச்சேரி உள்ளிட்ட தமிழக பகுத் தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார், பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், புதுச்சேரி நகராட்சி கழக அமைப்பாளர் மு.குப்புசாமி, பெரியார் சிந்தனையாளர்கள் இயக்க புதுச்சேரி மாநில ஒருங்கி ணைப்பாளர் தோழர் தீனா, மு.ந.நட ராசன் அவர்களின் மருமகள்கள் கீதா பாஸ்கரன், சுமதி நல்லய்யன், ப.க. தோழர் இரா.வெற்றிவேல், உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன், மு.ந.நடராசன் அவர்களின் பேரன்கள் பா.தமிழ்செல்வன், பா. கலைச்செல்வன், ந.தாமரைசெல்வன், ந.கதிர்செல்வன், ர.பிரணவ், ர.வையன் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். நிகழ்வில் கலைமாமணி வி.பி.மாணிக்கம், பெ.சி.இயக்கம் கர்ணன், மு.ந.நட ராசனிடம் உதவியாளராக இருந்த தோழர் ஆறுமுகம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அய்யா மு.ந.நடராசன் புதுச்சேரி உள்ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழக தலை வராக சிறப்பாக பணியாற்றியது மட்டுமல்லாது, பெரியார் கொள்கை விளக்க பிரச்சாரத் துண்டறிக்கைகளை அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, சிங்கப்பூர் மற்றும் டில்லியிலும், தமிழ் நாட்டின் பல மாவட்டங்களில் வினியோகித்து அதன்மூலம் இயக்கத்திற்கு உர மூட்டியவர் என்பதும் புலவர் குழந்தையின் இராவண காவிய தொடர் சொற்பொழிவை புதுவை பெரியார் படிப்பகம் மற்றும் புதுவை தமிழ் சங்கத்தில் தொடர்ந்து நடத்தி பல்வேறு கட்சியினர், அமைப்புகளின் தோழர்களை இயக்கத்தின்பால் ஈர்க்க காரணமானவர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. தலைமைக் கழகத்தில் அறிவிக்கும் போராட்டங்கள், மாநாடுகள், அனைத்திலும் தவறாது கலந்து கொள்வதுடன் தமது பங்களிப்பையும் தந்தவர். மேலும் இயக்க செயல் பாடுகளுக்கு பொருளுதவி அளித்து ஊக்கப்படுத்தியவர் என்பதும் மிகவும் போற்றத்தக்கது.

No comments:
Post a Comment