தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு உயருவதற்கு காரணம் என்ன? ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு உயருவதற்கு காரணம் என்ன? ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

 அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

புதுடில்லி, ஜூலை 31 தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு உயருவதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

உலக கல்லீரல் அழற்சி தினத்தை யொட்டி சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு நல மருத்துவமனையில் கருவில் உள்ள குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பரிசோதனையை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இருக்கும் ஒட்டு மொத்த கர்ப்பிணி தாய்மார்களை பரிசோதிக்கும் ஒரு புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்ப்பிணிகளுக்கு கல்லீரல் அழற்சி பாதிப்பு இருக் கிறதா என்பதைக் கண்டறிய அனைத்து அரசு மருத்துவமனை களிலும் பரிசோதனை மேற் கொள்ளப்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கரோனா பாதிப்பு சற்று உயர்ந்திருப்பது அச்சத்தை தரக்கூடிய விஷயம்தான். தொடர்ந்து இறங்குமுகமாக இருந்த தொற்றின் அளவு, நேற்று முன்தினம் (29.7.2021)  103 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.

சென்னை, கன்னியாகுமரி, ஈரோடு, கடலூர், கோவை மாவட் டங்களில் தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர் களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

கேரளாவில் வீடுகளில் தங்கி சிகிச்சைபெறும் முறை அதிகரித் துள்ளதால் தான், அங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் இல் லாமல், தொற்று பாதித்தவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

கரோனாவை நிச்சயம் கட்டுக் குள் கொண்டுவர முடியும். அதே நேரம் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பது, சமுக இடைவெளியை கடைபிடிக்காதது வருத்தம் அளிக்கிறது. பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். நாளை (31.7.2021) காலை கலைவாணர் அரங்கில் நடக்கிற கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர்கலந்து

கொள்கிறார்.

மருத்துவ கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. தமிழ்நாட்டில் மருத்துவ மாண வர்கள் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு மிகப்பெரிய அளவில் பயனளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment