பாசிஸம் என்பது தீவிர ஆதிக்க மனப்பான்மை கொண்ட அதிதீவிர தேசியவாதத்தின் ஓர் வடிவமா கும். சர்வாதிகார வல்லமையும் எதிர்ப்பை வன்முறை கொண்டு அடக்குவதும் சமூகத்தையும், பொருளா தாரத்தையும் வலுவான மத்திய அதிகாரத்தின் கீழ் வைத்திருப்பதும் இதன் பண்புகளாகும். இது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் அய்ரோப்பாவில் முக்கியத்துவம் பெற்றது.
காலனிய நீக்கம் என்பது காலனியாதிக்க சக்திகள் காலனிகள் மீது கொண்டுள்ளநிறுவனம் மற்றும் சட்டம் சார்ந்த கட்டுப்பாடுகளைச் சொந்த தேசிய அரசுகளிடம் வழங்குவதாகும். தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக் குடியேறிகளின் வம்சாவளியினரே ஆப்பிரிக்கநேர்கள் என்றும் அழைக்கப்பட்ட போயர் கள் ஆவர். இவர்களது மொழி ஆப்பிரிக்கான்ஸ்.


No comments:
Post a Comment