சியோல், ஜூலை 29- வடகொரியா-தென்கொரியா இடையே தகவல் தொடர்பு மீண்டும் தொடங்கியுள் ளது. மேலும் இருதரப்பு உறவை மேம்படுத்தவும் இரு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
1950-களில் நடந்த கொரிய போரின் போது வடகொரியாவும், தென்கொரியாவும் தனித்தனி நாடு களாக பிரிந்தன. அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் கடு மையான பகைமை நிலவி வந்தது. இந்த சூழலில் கடந்த 2018ஆம் ஆண்டு இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்து பேசிய பிறகு இருநாடுகள் இடையிலான பகை மையை தணிந்து இணக்கமான சூழல் உருவானது. ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் வடகொரி யாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் மீண்டும் மோதல் வலுக்கத் தொடங்கியது. இதற்கு காரணம் வடகொரியாவிலிருந்து தப்பி தென்கொரியா சென்ற வடகொரிய எதிர்ப்பாளர்கள் சிலர், வடகொரிய அரசை விமர் சிப்பது போன்ற துண்டு வெளியீடு களை ஹீலியம் பலூன்கள் மூலம் வடகொரியாவுக்கு அனுப்பியதுதான்.
இதுதொடர்பாக வடகொரியா, தென்கொரியா அரசை பலமுறை எச்சரித்தபோதும் துண்டு வெளி யீடுகள் அடங்கிய ஹீலியம் பலூன் களை வடகொரியாவுக்கு அனுப்பு வது தொடர்ந்தது. இது வடகொரி யாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற் படுத்தியது.இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரிய எல் லையில் கேசாங் நகரில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் இருந்த இருநாட்டு தகவல் தொடர்பு அலு வலகத்தை வடகொரியா வெடி குண்டு வைத்து தகர்த்தது. மேலும் தென்கொரியாவுடனான தகவல் தொடர்பு பாதையை வடகொரியா துண்டித்தது. இதனால் இரு நாடுகள் இடையிலான தகவல் தொடர்பு முற்றிலுமாக முடங்கி யது. மேலும் தென்கொரியாவுட னான உறவை முழுவதுமாக முறித்து கொள்வதாகவும் வட கொரியா அறிவித்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தது.
இந்த நிலையில் திடீர் திருப்ப மாக ஓர் ஆண்டுக்கு பிறகு வட கொரியா- - தென்கொரியா இடையிலான தகவல் தொடர்பு 27.7.2021 அன்று மீண்டும் தொடங்கியது. இந்த தகவலை தென்கொரியாவின் அதிபர் அலுவலகமான ‘புளு ஹவுஸ்' தெரிவித்தது.
இதுகுறித்து ‘புளு ஹவுஸ்' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் வடகொரியா தலை வர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பலமுறை தனிப்பட்ட கடிதங்களை பரிமாறிக்கொண்டனர்.இதில் முதல் வேலையாக, துண்டிக்கப் பட்ட இரு நாடுகள் இடையிலான தகவல் தொடர்பு பாதையை மீட் டெடுக்க மூன் மற்றும் கிம் ஒப்புக் கொண்டனர். அதன்படி ஓர் ஆண் டுக்கு பிறகு இரு நாடுகள் இடையிலான தகவல்தொடர்பு நேற்று தொடங்கியது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment