தமிழ்நாட்டில் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிறுபான்மையின மக்களின் நிலங்களை மீட்க நடவடிக்கை: பீட்டர் அல்போன்ஸ் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

தமிழ்நாட்டில் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிறுபான்மையின மக்களின் நிலங்களை மீட்க நடவடிக்கை: பீட்டர் அல்போன்ஸ் தகவல்

சென்னை, ஜூலை 29 திருவள் ளூர் மாவட்டத்தில் சிறுபான் மையினர் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் நலத் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நேற்று  (28.7.2021) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில், மாநில சிறு பான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது சிறுபான்மையி னத்தைச் சேர்ந்த 32 பேருக்கு ரூ.3,79,442 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன.

மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்றஇந்தக் கூட்டத்தில், மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினர் - செயலர் துரை. ரவிச்சந்திரன், ஆணைய துணைத் தலைவர் மஸ்தான், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறு பான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையின மக் களின் பிரதிநிதிகள் பங்கேற்று, அரசின் நலத் திட் டங்கள் முழு மையாக தங்க ளுக்கு கிடைப்பதில் உள்ள சிக்கல்கள், ஆக்கிர மிக்கப்பட் டுள்ள இடுகாடு, கல்லறைகள் உள்ளிட்டவை குறித்து எடுத் துரைத்தனர்.

இதைக் கேட்டறிந்த ஆணை யத் தலைவர் பீட்டர் அல் போன்ஸ், இவை அனைத்தும், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என்றார். தொடர்ந்து, சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 32 பேருக்கு ரூ.3.79 லட்சம் மதிப்பில் பல் வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பிறகு, அவர் செய் தியாளர்களிடம் தெரிவித்த தாவது:

தமிழ்நாட்டில் அரசால் சிறுபான்மையினருக்காக செயல்படுத்தப்படும் எவ்விதத் திட்டங்களும் கடந்த 10 ஆண்டு களாக முறையாக அமல் படுத்தப்படவில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிகிறது. இந்த ஆண்டு முதல் அனைத்துத் திட்டங்களும் முழுமையாக சிறுபான்மையின மக்களை சென்றடையும் வண்ணம், தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்ஆய்வுக் கூட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசின் வர லாற்றிலேயே முதன் முறையாக சிறுபான்மையினர் நலத்துறை என்ற புதிய அமைச்சகத்தை உரு வாக்கி, அத்துறை அமைச்ச ருடன் தமிழ்நாடு முதலமைச்சர் பல புதிய திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளார். அத்திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையின ரின் இடுகாடுகள், கல்லறைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள் ளதால், ஈமச்சடங்குகளை நிறை வேற்றுவதில் பல இன் னல்கள் உள்ளதை அறிய முடி கிறது.

ஆகவே, தமிழ்நாட்டில் சட் டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிக் கப்பட்டுள்ள சிறுபான்மையின மக்களின் நிலங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

No comments:

Post a Comment