மதுரை, ஜூலை, 30 கடவுச்சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை புகலிட கோரிக்கையாளர்களுக்கு குடியு ரிமை வழங்க முடியாது என்று ஒன்றிய அரசு மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் கூறியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் 80 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ்க் குடும்பங்கள் முகாம்களில் வசிக் கின்றனர். இவர்களில் 30 ஆயிரம் பேர் இந்திய வம்சாவழியில் வந்த வர்கள். ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட் டத்தில், ‘அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார் சிகள், ஜெயின், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியு ரிமை வழங்கப்படும்’ என்று கூறப் பட்டுள்ளது. ஆனால், இலங் கையில் இருந்து வந்த தமிழ் மக்களுக்கு குடியுரிமை வாய்ப்பு தரப்படவில்லை இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப் பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது 30.07.2021 இன்று தனது தரப்பு பதிலை அளித்த ஒன்றிய அரசு “இலங்கையிலிருந்து புகலி டம் கோரி இந்தியாவிற்கு வந்த தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும், அவர்களுக்கு கடவுச்சீட்டு இருந்தால் குடியுரிமை கொடுப்பது குறித்து அந்த துறை அதிகாரிகளிடமும் இலங்கை அரசிடமும் ஆலோ சனை பெற்றும் முடிவு செய்வோம் என்று கூறியது.
30 ஆண்டுகாலம் இலங்கை உள்நாட்டுப்போரில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உடை மைகளை இழந்து வந்த மக்களிடம் கடவுச்சீட்டு இருந்தால் குடி யுரிமை கொடுப்பது குறித்து யோசிப்போம் என்று சொல்வது மனிதநேயமற்ற நிலைப்பாடு ஆகும்.
ஒன்றிய அரசு தமிழர்களின் மீது தொடர்ந்து காட்டும் வன் மத்தின் ஒரு பகுதியாகவே இது கருதப்படுகிறது.
No comments:
Post a Comment