முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை , ஜூலை 29- குழந்தைத் திருமணம், பெண்சிசுக் கொலையைத் தடுக்கும் சட் டங்கள் கடுமையாக நடை முறைப்ப டுத்தப்பட வேண்டும் என்று அரசு அதிகாரிகளி டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:
சென்னை தலைமைச்செயல கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரி மைத்துறை, சமூக சீர்திருத்தத் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மகளிர், குழந்தைகள், மூன் றாம் பாலினர், மூத்த குடிமக் கள் ஆகியோரின் பாதுகாப்பு, உரிமை மற்றும் நலனை உறுதி செய்ய வேண்டும், பெண் கல்வி மற்றும் சமூகச் சீர்த்திருத்தங்க ளுக்காகச் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்ட உதவி களில் குறிப்பாக, திருமண நிதி யுதவி திட்டங்களில் தகுதி வாய்ந்த பயனாளிகள் எவரும் விடுபடாமல் உரிய காலத்தில் பயன்களை வழங்கவேண்டும்.
சமூக அவலங்கள்
குழந்தைத்திருமணம், பெண் சிசுக் கொலை போன்ற சமூக அவலங்களைக் களைய உரிய விழிப்புணர்வை ஏற்படுத் துவ தோடு, இதுகுறித்த விவ ரங்கள் அனைவரையும் சென் றடையச் செய்ய வேண்டும், அதற்கான சட்டங்களைக் கடு மையாக நடை முறைப்படுத்த வேண்டும். குழந்தைத் திரும ணங்கள் அதிகமாக நடை பெறும் விழுப்புரம், திண்டுக் கல், ஈரோடு, கரூர். கிருஷ்ண கிரி, தர்மபுரி மற்றும் தேனி மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்,
ஊட்டச்சத்து குறைபாடு
தமிழ்நாட்டை ஊட்டச் சத்துக் குறைபாடில்லாத மாநி லமாக உருவாக்க வேண்டும். பாது காப்பு தேவைப்படும் அனைத்து குழந்தைகளையும் கண்டறிந்து பராமரிப்பு இல் லங்கள் மூலம் சிறப்பான கல்வி அளிக்க வேண்டும்.
கரோனா நோய்த் தொற்று காரணமாகத் தாய் அல்லது தந்தை அல்லது இருவ ரையும் இழந்த குழந்தைகளை கண்ட றிந்து தற்போது அறிவிக்கப் பட்ட வைப்புத் தொகை திட் டத்தில் பயன்பெற உரிய நட வடிக்கை எடுக்கப்பட வேண் டும். திருநங்கையர் கல்வியறிவு பெற்று, சுயமாக இயங்கவும், பாதுகாப்புடன் சிறப்பாகவாழ வும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் திருநங்கையர் நலவாரியத்தின் மூலம் மேற் கொள்ள வேண்டும்.
முதியோர் இல்லங்கள்
அரசு உதவியுடன் செயல் படும் 129 முதியோர்களுக்கான இல்லங்களை அவ்வப்போது உயர் அலுவலர்கள் பார்வை யிட்டு, அந்த இல்லங்கள் அனைத்து வசதிகளுடன் இயங்குவதையும், முதியோர் உடல்ந லத்துடன் மகிழ்வுடன் இருப்ப தையும் உறுதிசெய்ய வேண்டும். பணிபுரியும் மகளிர் விடுதி இல்லாத மாவட்டங் களில் விடுதிகள் அமைக்க வேண்டும்.
பெண் கல்வி
சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமைக்கான விழிப்பு ணர்வு பணிகளை மேற்கொள் ளவும், பெண் கல்வியை உறுதி செய்யவும், மாணவர்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில், சமூக சீர்திருத் தம் குறித்த பேச்சுப்போட்டி கள், கட்டுரைப்போட்டிகளை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச் சர் பி.கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment