மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை
சென்னை, ஆக.5 மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை 1 லட்சம் பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளது.
தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை, மாநகராட்சி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், புறநகர் அரசு மருத்துவமனைகள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
ஒவ்வொரு மய்யத்திலும் மக்கள் நீண்ட வரிசையில் தடுப் பூசிக்காக காத்திருக்கும் நிலை தான் ஏற்படுகிறது. இதில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பில் மாநகராட்சி இளங் கோவன் பள்ளியில் செயல்படும் தடுப்பூசி மய்யம், மாவட்டத் திலேயே மிகப்பெரிய தடுப்பூசி மய்யமாக திகழ்கிறது.
இந்த மய்யத்தில் ஆரம்பத்தில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அதனால், மக்கள் அதிகளவு குவிந்து நெரிசல் ஏற்பட்டதால் தினமும் 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டதால் தின மும் ஏராளமானோர் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்ற மடைந்து திரும்பிச் சென்றனர்.
அதன்பிறகு பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று தற்போது தினமும் 1,000 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
அப்படியிருந்தும் தற்போதும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடையில்லாமல் தடுப் பூசி போட்ப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் இருப்பு இருந்தாலே போடப்படு கிறது. மேலும், கோவாக்சின் தடுப்பூசி பற்றாக் குறை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உள்ளது. அதனால், இந் தத் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்கள், இரண்டாவது டோஸ் போட முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையின் மாநகராட்சி இளங்கோவன் பள்ளி தடுப்பூசி மய்யம், நேற்று (4.8.2021) ஒரு லட்சம் தடுப்பூசிகள் என்ற இலக்கை அடைந்துள்ளது. 1,00,000ஆவது நபருக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சிக்கு மருத்துவ மனை நிர்வாகம் ஏற்பாடு செய் திருந்தது. மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர், கலந்து கொண்ட 1,00,000ஆவது நபருக்கு தடுப்பூசி போடுவதைப் பார்வையிட்டார். அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேலு, மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் மருத் துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment