புதுடில்லி, ஆக.6 பிரபல, ஓலா நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனம், இம்மாதம் 15ஆம் தேதியன்று அறிமுகம் ஆக உள்ளது என, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால், டுவிட்டர் வாயிலாக தெரிவித்துஉள்ளார்.
டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ள தாவது:
மின்சார இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்த அனைவருக்கும் மிக்க நன்றி.
ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி குறித்து திட்டமிட்டு வருகிறோம்.
மின்சார ஸ்கூட்டர் குறித்த அதன் சிறப்பம் சங்கள், கிடைக்கும் நாள் உள்ளிட்ட சகல தகவல்களும் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஓலா நிறுவனம், கடந்த ஜூலை 15ஆம் தேதியன்று முன்பதிவை துவக்கியது. முன்பதிவுக்கான கட்டணம் 499 ரூபாய்.
இதையடுத்து, 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக, ஓலா பின்னர் தெரிவித்தது. ஓலா ஸ்கூட்டர் 10 வண்ணங்களில் அறிமுகம் ஆகும் என தெரிகிறது.

No comments:
Post a Comment