மத்தியப் பிரதேசத்தில் உள்ள டாக்டர் ஹரிசிங் கவுர் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை அமெரிக் காவின் மாண்ட்க்ளேர் மாநில பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இணைய வழி கருத்தரங்கம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தது. கலாச்சாரம் மற்றும் மொழியியல் பற்றிய இந்த கருத்தரங்கில் மேனாள் சிஎஸ்அய்ஆர் தலைமை விஞ்ஞானி கவுர் ராசா, டில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அபூர்வானந்த், அய்.அய்.டி. அய்தராபாத் பேராசிரியர் ஹர்ஜிந்தர் சிங் மற்றும் அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் மாநில பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் டாக்டர் அசீம் ஹஸ்னைன் ஆகியோர் பங்கேற்க இருந்தனர்.
இந்த கருத்தரங்கில் இடம் பெற்றுள்ள பேச்சாளர்கள் குறித்து ஜூலை 22ஆம் தேதி முதல் எதிர்ப்பு தெரிவித்து வந்த பா.ஜ.க. மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பு - இது தொடர்பாக சாகர் மாவட்ட காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்திருந்தது. கருத்தரங்கு தொடங்க 2 மணி நேரம் இருந்தபோது காவல்துறையின் குறுக்கீட்டால் இந்த இணைய வழி கருத்தரங்கம் திடீரென்று நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து ஏபிவிபி அமைப்பின் சாகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிறீராம் ரிச்சாரியா சாகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதுல் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், “வெபினாரில் (இணைய வழி கருத்தரங்கம்) கலந்து கொள்ள உள்ள கவுர் ராசா மற்றும் பேராசிரியர் அபூர்வாநாத் ஆகிய இரு பேச்சாளர்கள் தேச விரோத மனநிலை கொண்டவர்கள் மற்றும் அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். டில்லி கலவரத்தில் அபூர்வாநாத் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது, மற்றும் அதற்காக விசாரணை நடத்தப்பட்டது. பிரபல பயங்கரவாதி அப்சல் குருவுக்காக கவுர் ராசா ‘அஜ்மல் பிரேம்’ என்ற கவிதை எழுதியுள்ளார்.” என்று குறிப் பிட்டிருந்தார்.
இது தொடர்பாக சாகர் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் அதுல் சிங், பல்கலைக்கழக துணை வேந்தருக்கு எழுதிய கடிதத்தில் “வெபினாரில் (இணைய வழி கருத்தரங்கம்) கலந்து கொள்ளும் பேச்சாளர்களின் கடந்த கால வரலாறு, தேச விரோத மனநிலை மற்றும் ஜாதி தொடர்பான அறிக்கைகள் தனக்குக் கிடைத் துள்ளதாகவும், கருத்தரங்கில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் காட்சிப்படுத்தப்பட வேண்டிய யோசனைகள் குறித்து முன்கூட்டியே தங்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த கடிதத்தில், “பல்கலைக்கழக நிர்வாகம் மானுடவியல் துறை மூலமாக ஒன்றிய கல்வி அமைச்சகத்திற்கு அனுமதி நடத்த வேண்டி கடிதம் எழுத வேண்டும். மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505 -இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கவில்லை என்றால் காணொலி கருத் தரங்கை ஒத்தி வைக்க வேண்டும். பேராசிரியர் கவுதம் மற்றும் அவரது குழுவினர் பல்கலைக்கழக 'லோகோ', பெயர் அல்லது எந்தவொரு பல்கலைக்கழக மேடை யையும் நிகழ்விற்காக பயன்படுத்தக் கூடாது” என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏபிவிபியின் ஒலி பெருக்கியாக இருந்தது அந்தக் கடிதம்.
பல்கலைக்கழக துணைவேந்தர் ஜேடிஅகி இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
டில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அபூர் வானந்த், “காவல்துறை, ஏபிவிபி அமைப்பை அமைதிப் படுத்துவதற்குப் பதிலாக, கருத்தரங்க அமைப்பாளர் களுக்கு எதிராகத் திரும்பியது மிகவும் வருத்தமளிக்கிறது. ஏபிவிபி அமைப்பு அளவுக்கு மீறிய செல்வாக்கைப் பயன்படுத்துகிறது.
பல்கலைக் கழகம் தன்னாட்சி கொண்டது - இதில் வெளியார் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்று கூறும் துணிவு துணைவேந்தருக்கு இல்லை. அந்த அளவு சங்பரிவார் கொட்டம் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கொடி கட்டிப் பறக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப் பட்டுள்ள அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக அரசு இயந்திரங்கள் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மதவிடயங்களில் தலையிடலாமா என்று கேள்வி எழுப்பும் சங்கிகள் விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிராக செயல் படலாமா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்
வார்கள்?
No comments:
Post a Comment