முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் நினைவு நாள் நிகழ்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் நினைவு நாள் நிகழ்வு

வடலூரில் இன்று (7.8.2021) காலை ஒன்பது மணி அளவில் வடலூர் சபை பேருந்து நிறுத்தம் அருகில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் நினைவு நாள் நிகழ்வு ஒன்றிய திமுக செயலாளர் பொறியாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. திமுக இளைஞரணி தலைவர் தமிழ்ச்செல்வன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் மற்றும் தோழர்கள் மலரஞ்சலி செலுத்தினர். வடலூர் கழக தலைவர் புலவர் ராவணன், மேனாள் ஒன்றிய தலைவர் இந்திரஜித், வடலூர் திக செயலாளர் குணசேகரன், ராகவேந்திரா சிட்டி முருகன், நகர துணைத்தலைவர் முத்தையன் மதிமுக மணிகண்டன், மேனாள் பேரூராட்சி தலைவர் ராமச்சந்திரன் மற்றும் தி.., திமுக தோழர்கள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தலைவர் கலைஞர் புகழ் முழக்கம் எழுப்பப்பட்டது.

No comments:

Post a Comment