சென்னை, ஆக.6 இணையத் தொடர்பு வசதி மூலம் எழுத்துப் பணி மற்றும் மொழி மாற்ற சேவைப் பணிகள், மருத்துவ ஆவணங்களைப் படியெடுத்தல், அவற்றைப் புதிதாக உருவாக்குதல் மற்றும் மருத்துவக் குறியீடு எழுதும் பணி போன்றவற்றில் ஈடுபட்டுள்ள எகுவிட்டி சொல்யூஷன்ஸ் நிறுவனம், தற்போது விரிவாக்கம் செய்யும் வகையில் சென்னையில் புதிய அலுவலகம் ஒன்றைத் தொடங்க உள்ளது.
இதுகுறித்து பேசிய இந்நிறுவனத் தலைமை செயல் அதிகாரி கஷ்யப் ஜோஷி , சென்னையில் எமது அலுவலகம் தொடங்குவது குறித்து மிக்க மகிழ்ச்சி. அடுத்த 12 முதல் 15 மாதங்களில் இங்கு 800 முதல் 1000 பேரை புதிதாகப் பணியமர்த்த திட்டங்களை உருவாக்கியுள்ளோம். தென்னிந்தியாவில் கொட்டிக் கிடக்கும் வணிக வாய்ப்பு மற்றும் திறன்கள் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த சென்னை அலுவலகம் மருத்துவ மற்றும் சுகாதாரச் சேவைப் பணிகளில் உள்ள மிக முக்கியமான நிறுவனம் என்ற பெயரை எங்களுக்குப் பெற்றுத் தரும் என நம்புகிறோம். ஏற்கெனவே இத்துறையில் பயிற்சி பெற்ற, திறமையான நபர்கள் ஏராளமானோர் சென்னையில் இருப்பதால், எங்களது புதிய அலுவலகத்தின் மூலம் நோயாளிகள் குறித்த பிழையற்ற, துல்லியமான தகவல்களைத் திரட்டி, அவற்றை முறையாகப் பதிவு செய்து வாடிக்கையாளர்களுக்குத் திறம்பட சேவையாற்ற முடியும் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment