டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக்கோரி கடந்த பல மாதங்களாக டில்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் தற்போது நாடாளுமன்ற கட்டடம் எதிரே உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் நேற்று நேரில் சென்று ஆதரவு அளித்தனர்.
டெக்கான் கிரானிகல், சென்னை:
· காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவை, அந்நிறுவன தொழிற்சங்க அமைப்புகள் கடுமையாக எதிர்த்துள்ளன.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· கேரள மாநிலத்தில் கிறிஸ்துவ நாடார் வகுப்பினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சென்ற ஆண்டு சேர்க்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஒன்றிய அரசு நிறைவேற்றிய 102ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் காரணமாக, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை அறிவிக்க மா நில அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, கேரள மாநில உயர் நீதிமன்றம் அரசின் ஆணைக்கு தடை விதித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட மோடி அரசு ஒப்புக் கொண்டால், அரசை ஆதரிக்கத் தயார் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment