ஒலிம்பிக்கில் விளையாடிய வாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பரிசாகக் கொடுத்த பவானி தேவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 5, 2021

ஒலிம்பிக்கில் விளையாடிய வாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பரிசாகக் கொடுத்த பவானி தேவி

சென்னை, ஆக.5 ஒலிம்பிக்கில் வாள் வீச்சுப் போட்டியில் கலந்து கொண்ட பவானி தேவி, முதல மைச்சர் மு..ஸ்டாலினை நேற்று (4.8.2021) சந்தித்தார்.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்துவரும் நிலையில், இந்தியா சார்பில் 100-க்கும் அதிக மான வீரர், வீராங்கனைகள் பல் வேறு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இதில், இந்தியா சார்பில் வாள்வீச்சுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி கலந்து கொண்டார். இரண் டாவது சுற்று வரை முன்னேறிய அவர், பிரான்ஸ் வீராங்கனையிடம் 7-15 என்ற புள்ளிகளில் தோல்வியைத் தழுவினார்.

இதையடுத்து, சென்னை திரும் பிய அவர்,  தலைமைச் செயலகத்தில் முதல மைச்சர்  மு..ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகி யோரைத் தன் தாயாருடன் சந்தித் தார்.

அதன் பின்னர்  பவானிதேவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறிய தாவது:-

ஒலிம்பிக்கில் நாங்கள் விளையா டியதை முதலமைச்சர் பார்த்துள் ளார். மிகவும் நன்றாக விளை யாடியதாக பாராட்டினார். போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பும் எங்களுடன் இருமுறை கலந்துரையாடி வாழ்த்து தெரிவித்தார். எங்களுக்குத் தேவையான தைச் செய்து கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்தியாவிலேயே முதல் முறை யாக வாள்வீச்சுப் போட்டியில் நான் கலந்து கொண்டேன். தமிழ்நாட்டுக் கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கக்கூடியதாக அது அமைந் துள்ளது. இதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என் குடும்பத்தினர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். குறிப்பாக என் அம்மா மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அதைக் குறிப்பிட்டு என் அம்மாவையும் முதலமைச்சர் பாராட்டியிருந்தார்.

முதலமைச்சருக்கு என்னுடைய வாளை நான் பரிசாகக் கொடுத்தேன். ஒலிம்பிக்கில் இந்தியாவில் வாள் வீச்சில் முதல் முறையாகப் பயன் படுத்திய வாள் என்பதால் அதனைப் பரிசாகக் கொடுக்க வேண் டும் என நினைத்தேன்.

அடுத்த ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட வேண்டும், அதற்கு இந்த வாள் தேவை எனக்கூறி எனக்கே அதைத் திருப்பிப் பரிசாகக் கொடுத்தார்.

என்ன உதவியானாலும் செய்யத் தயார், அடுத்த ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட வேண்டும் எனக் கூறினார். தமிழ்நாடு அரசின் உறு துணை நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையையும் அளித்தார். விளை யாட்டுத்துறை அமைச்சரையும் சந்தித்தோம். 

வருங்காலத்தில் உதவிகரமாக இருப்பதாக நம்பிக்கை அளித்தார். மின்துறையில் வேலை செய்வதால் அது குறித்தும் முதல மைச்சர் கேட்டிருந்தார். அடுத்ததாக மின்துறை அமைச்சரையும் சந்திக்க உள்ளோம்.

இந்த அளவு நான் சென்றிருக் கிறேன் என்றால், எஸ்டிஏடி  அமைப்பிலிருந்து வரும்எலைட் ஸ்காலர்ஷிப்எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.   வெளிநாடு களில் பயிற்சி பெற்று, ஒலிம்பிக்கில் நன்றாக விளையாட முடிந்தது. இன்னும் பக்கபலமாக இருந்தால் நன்றாக விளையாடி நம் நாட்டுக்கு அதிக பதக்கங்களை வெல்வேன்.

 ஒலிம்பிக் சென்றால் பதவி உயர்வு நிச்சயம் கொடுப்பார்கள். முதல் முறையாகச் சென்றால் இன்னும் நல்ல பதவி கொடுப்பார்கள். அதனை நான் எதிர்பார்க்கிறேன். ஏற்கெனவே எனக்குப் பிற மாநிலங் களிலிருந்தும் ஒன்றிய அரசிடமி ருந்தும் வேலைக்கான அழைப்புகள் வந்தன.

ஆனால், எனக்குத் தமிழ் நாட்டில் இருக்க வேண்டும் என்ற ஆசையால் இங்கு இருக்கிறேன். இதில் சாதகமான செய்தி வரும் என நம்புகிறேன்.

இவ்வாறு பவானி தேவி தெரிவித்தார்.

No comments:

Post a Comment