கேள்வி: பா.ஜ.க.மீது ராஹூலுக்கு பயமில்லை. ஆனால், வெகு காலமாகவே சோனியா காந்திக்கு பயம் உள்ளது. அப்படியானால், ராஹூலின் கூற்றுப்படி சோனியா, ஆர்.எஸ்.எஸ்க்குச் சென்றால் எப்படி இருக்கும்?
பதில்: ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் இயக்கமான
ஆர்.எஸ்.எஸில் சோனியா எப்படிச் சேர முடியும்? அந்த தைரியம்தான் ராஹூலுக்கு.
- ‘துக்ளக்', 11.8.2021, பக்கம் 30
ஆக, ஆர்.எஸ்.எஸில் பெண்கள் சேர முடியாது! ஒப்புதல் வாக்குமூலம்!
ஆரியக் கூத்து!
கேள்வி: கோவிலுக்குச் சென்றால் உண்டியலில் காணிக்கை போடலாமா?
பதில்: உண்டியல் பணத்தை அறமற்ற துறையே எடுத்துக்கொள்ளும். அதனால் சேவை மனப்பான்மை கொண்ட அர்ச்சகர்களின் தட்டில் இடுவது நல்லது.
- ‘விஜயபாரதம்', ஆர்.எஸ்.எஸ். இதழ் 23.7.2021, பக்கம் 35
எதுவாக இருந்தாலும் பார்ப்பான் வயித்தில் அறுத்துக்கட்ட வேண்டுமே - கோவில் என்பதே சுரண்டல் கருவிதானே!
பார்ப்பன சாணக்கியரும் இதைத்தானே சொல்லுகிறார்!
No comments:
Post a Comment