இங்கிலாந்து - இந்தியா இடையே பயணக்கட்டுப்பாடு தளர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 6, 2021

இங்கிலாந்து - இந்தியா இடையே பயணக்கட்டுப்பாடு தளர்வு

லண்டன், ஆக.6 தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர் களுக்கு இங்கிலாந்து நாட்டில், பயணக்கட்டுப்பாட்டில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து - இந்தியா இடையே யான பயண கட்டுப்பாட்டு விதி முறைகளை தளர்த்த வேண்டும் என்று இங்கிலாந்து வாழ் இந்தி யர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு பயணக்கட்டுப் பாட்டில் ஒரு தளர்வு வழங்கப் பட்டுள்ளது.

இதன்படி இனி 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தி யர்கள், இங்கிலாந்து நாட்டுக்கு செல்கிறபோது அவர்கள் 10 நாட் கள் விடுதியில் கட்டாயமாக தங் களை தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவை இல்லை. 

இதுபற்றி இங்கிலாந்து போக்குவரத்து அமைச்சர் டுவிட் டரில் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அய்க்கிய அரபு அமீரகம், இந்தியா, பஹ்ரைன் ஆகிய நாடுகள் சிவப்பு நிற பட்டியலில் இருந்து பொன்னிற பட்டியலுக்கு மாற்றப் படுகின்றன.

இந்த மாற்றம் 8-ஆம் தேதி காலை 4 மணிக்கு அமலுக்கு வருகிறது.

நாம் எச்சரிக்கையான அணுகு முறையை தொடர்கிறபோது, மக்கள் உலகளவில் தங்கள் குடும் பங்களோடும், நண்பர்களோடும், தொழிலுடனும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிற வகையில், மேலும் பல இடங்களை திறந்து விடுவது சிறப்பான செய்தியாக அமைந்துள்ளது. நமது வெற்றிகர மான தடுப்பூசி திட்டத்துக்கு நன்றி.

இவ்வாறுஅவர்கூறி உள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் பொன்னிற பட்டியலில் இடம் பிடித்துள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள், இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு 3 நாடுகளுக்கு முன் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், இங்கிலாந்து சென்ற பின்னர் 2 கரோனா பரிசோதனைகளை செய்துகொள் வதற்கு முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும், பயணி

இருப்பிடம் அறியும் லொ

கேட்டர் படி வத்தை நிரப்பி அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்

தக்கது.

No comments:

Post a Comment