விரைவில் புதிய மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்கிறது பிகாஸ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 3, 2021

விரைவில் புதிய மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்கிறது பிகாஸ்

மும்பை, அக. 3- பிகாஸ் (BGauss)  நிறுவனம் 2021 நான்காவது காலாண்டில் இரண்டு மின்சார இரு சக்கர வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மின்சார இருசக்கர வாகனம், வடிவமைப்பு, உற்பத்தி அனைத்துமே இந்தியாவில் உள்ள பிகாஸ் குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

புதிய வாகனங்கள் மூலம் வாடிக்கையாளர் கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த பிகாஸ் திட்டமிட்டுள்ளது. தனித்துவம் மிக்க புது மின்சார இருசக்கர வாக னங்களை உற்பத்தி செய் யும் நோக்கில் சக்கனில் செயல்பட்டு வரும் உற் பத்தி ஆலையை பிகாஸ் மாற்றி அமைத்து இருக் கிறது.

புதிய வாகனங்கள் நீண்ட தூரம் செல்லும் வகையிலும், அசத்தல் தோற்றம், சிறப்பான பாதுகாப்பு மற்றும் செயல் திறன் வழங்கும் வகையி லும் இருக்கும். இந்திய சந்தையின் முதல் மற்றும் இரண்டம் தர நகரங் களில் பிளாக்ஷிப் ஸ்டோர்  மூலம் விற்பனை மய் யங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த பிகாஸ் திட்டமிட்டு உள்ளது.

தற்போது நாடு முழுக்க 13 விற்பனை மய் யங்களை பிகாஸ் கொண் டிருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் இதனை 35 ஆகவும் 2022 மார்ச் மாதத்திற்குள் 100 விற்பனை மய்யங்களை திறக்கவும் பிகாஸ் திட்ட மிட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment