போனசை பொங்கலோடு அளிக்கலாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 4, 2021

போனசை பொங்கலோடு அளிக்கலாம்!

போனஸ் என்ற பெயரில் அரசுப் போக்குவரத்து கழகம், மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆரியப் பண்டிகையாம் தீபாவளிக்கு தமிழ்நாடு அரசு கொடுத்து வருகிறது. அந்த தொகையை வைத்து அந்த குடும்பங்கள் வெடி, பலகாரம், புத்தாடை என குதூகலமாக கூத்தடிக்கிறார்கள். ஆனால் உழைக்கும் மக்கள் அதைப்பார்த்து, தங்களுக்கு இந்த வாய்ப்பு இல்லையே என்று ஏங்குகிறார்கள்.

தீபாவளிக்குக் கொடுக்கும் போனஸை தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவிற்குக் கொடுக்கலாம். (கேரளாவில் ஓணம் விழாவிற்கு தான் போனஸ் வழங்குகிறார்கள்). அதை உடனடியாக மாற்றினால் எதிர்ப்பு வரும்.

அதை தவிர்க்க வழக்கம்போல் இவ்வாண்டு (2021)இல் தீபாவளிக்கு கொடுத்துவிட்டு, வரும் பொங்கல் திருநாளுக்கு (2022) இடைப்பட்ட காலத்தை கணக்கில் எடுத்து அதற்குரிய தொகையை கொடுத்துவிட்டு அடுத்த ஆண்டு (2023) முதல் பொங்கல் நாளில் வழங்கினால் பிரச்சினை வர வாய்ப்பு இல்லை. எனவே, இந்த கருத்தை மாண்புமிகு, மானமிகு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என்பது எனது கருத்து.

- தி.குணசேகரன்

நகரத் தலைவர், திராவிடர் கழகம்

திருத்துறைப்பூண்டி

No comments:

Post a Comment