1963இல் தமிழ்நாட்டில் அம்மைத் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,559.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 1967-இல் அந்த எண்ணிக்கை 71 ஆகக் குறைந்தது.
கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 1969இல் அம்மை காரணமான உயிரிழப்பு பூஜ்ஜியமானது. 1969இல் கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்றது ஒரு அரசியல் தலைவராக அவருடைய வெற்றி.
ஆனால், அந்த ஆண்டில் தமிழ்நாட்டில் அம்மைநோயால் ஒருவர்கூட இறக்கவில்லை என்பது ஒரு முதலமைச்சராக அவர் சாதித்துக்காட்டிய வெற்றி. உலக சுகாதார நிறுவனமே தமிழ்நாட்டை அன்று பாராட்டியது. அம்மை ஒழிப்புத் திட்டத்தைக் கைவிட்ட மாநிலங்கள் பிறகு தமிழ்நாட்டைப் பார்த்துத் தாங்களும் பின்பற்றத் தொடங்கின. கலைஞர் முதலாவது ஆட்சியாண்டில் அம்மைநோய்த் தடுப்பில் தமிழ்நாடு இந்தியாவுக்கு வழிகாட்டியது.
இன்று அவரது புதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் கரோனா
தடுப்பு நடவடிக்கையும் தற்போது இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக மாறிக்கொண்டு வருகிறது.
No comments:
Post a Comment