சிறைக் கைதிகளை தலிபான்கள் விடுவித்தனர் ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளின் உயிருக்கு ஆபத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 5, 2021

சிறைக் கைதிகளை தலிபான்கள் விடுவித்தனர் ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளின் உயிருக்கு ஆபத்து

காபூல், செப். 5- ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ள தலிபான்கள் புதிய ஆட்சி அமைக்கும் முயற்சி யில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதிய அரசு குறித்து விரைவில் அதி காரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலிபான்களின் முந்தைய ஆட் சிக்காலத்தில் இருந்ததுபோன்று இப்போதும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படலாம் என் றும், பெரும்பாலான பணிகளில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட லாம் என்றும் அச்சம் எழுந்துள் ளது. ஆனால், பெண்களின் உரி மைகள் பாதுகாக்கப்படும் என தலிபான் அமைப்பு கூறி உள்ளது. மேற்கொண்டு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள சிறைக் கைதிகளை தலி பான்கள் விடுவித்துள்ளனர். அவர் களால், ஆப்கானிஸ்தானில் உள்ள சுமார் 250 பெண் நீதிபதிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே ஆப்கானிஸ்தா னில் நீதித்துறையில் பணிபுரியும் பெண்களை பயங்கரவாதிகள் குறி வைத்து தாக்குதல் நடத்தி உள்ள னர். ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் 2 பேரை சுட்டுக் கொன்றனர். இப்போது நாடு முழு வதும் கைதிகள் தலிபான் அமைப் பால் விடுதலை செய்யப்பட்டிருப் பதால், பெண் நீதிபதிகளின் உயி ருக்கு ஆபத்து இருப்பதாக நாட்டை விட்டு வெளியேறிய பெண் நீதிபதி ஒருவர் கூறி உள்ளார்.

காபூலில்  எனது வீட்டிற்கு தலிபான் அமைப்பைச் சேர்ந்த நான்கைந்து பேர் சென்று என்னைப் பற்றி விசாரித்துள்ளனர். இங்கிருந்த பெண் நீதிபதி எங்கே? என்று கேட்டுள்ளனர். அவர்கள் என்னால் சிறையில் அடைக்கப் பட்டவர்கள். இதேபோல் ஆப் கானிஸ்தானில் தற்போது இருக் கும் பெண் நீதிபதிகளிடம் தொடர் பில் இருக்கிறேன். அவர்கள், தங் களை மீட்காவிட்டால் உயிருக்கு நேரடி ஆபத்து இருப்பதாக என் னிடம் கூறுகின்றனர்  என அந்த நீதிபதி தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு பெண் நீதிபதிகள் சங்கத்தில் உள்ள சக நீதிபதிகள் மற் றும் மனித உரிமைகள் அமைப்பி னரின் உதவியுடன் சமீபத்தில் வெளியேறிய ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளில் இவரும் ஒரு வர். மற்ற நீதிபதிகளும் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்காக மனித உரிமை ஆர்வலர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment