சீனாவில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் கீழடியின் பெருமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

சீனாவில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் கீழடியின் பெருமை

பெய்ஜிங், செப். 4- கீழடி ஆய்வின் மூலம் வெளிவந்து கொண்டிருக்கும் தமி ழர்களின் வரலாற்று பெருமைகள் குறித்து சீனாவில் உள்ள மாண வர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருவது தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைர லாகி வருகின்றன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் 7ஆம் கட்ட அகழாய் வின் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நாகரீகத்தின் கல்வி, கலை, நீர் மேலாண்மை போன்றவை குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கீழடி 7ஆம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 தளங்களிலும் நடந்து வருகிறது. இதில் அகரத்தில் இதுவரை 8 குழிகள் தோண்டப் பட்டு ஏராளமான பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பண்டைய காலத்தில் வைகை ஆறு, கீழடி, அகரம் வழியாக சென் றிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அங்கு கண்டெடுக் கப்பட்ட பிராமி எழுத்துக்கள், உறைகிணறு, ஆபரணங்கள் உள் ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல்ஆதாரங்கள் அனைத்து தரப்பினரும் அறியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ் நாகரீகத்தை விளக் கும் கீழடியின் பெருமை தற்போது சீனா வரை சென்றுள்ளது. அங் குள்ள யுனன் மின்சூ பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை மாணவர் களுக்கு கீழடி அகழ்வில் தமிழர்களின் வரலாற்று பெருமைகள் குறித்து தமிழ் ஆசிரியை நிறைமதி கிகி ஜாங் பாடம் எடுத்ததை தனது முகநூலில் பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.

இவர் சில ஆண்டுகளுக்கு முன் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை நேரில் பார்வையிட்டு சென்றார். இந்த நிலையில் தன்னுடைய பல்கலைக் கழக மாணவர்களுக்கு கீழடி பெருமை குறித்து பாடம் எடுத்த தாக மிகப் பெருமையுடன் தனது முகநூல் பக்கத்தில் அவர் பகிர்ந் துள்ளார். சிவகங்கை - சீனா என்ற கமெண்டுகளுடன் கீழடி குறித்து சீனாவில் ஆசிரியர் பதிவிடும் படங் களை தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர்.


No comments:

Post a Comment