டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி பெண்கள் போராட வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே நமது நாட்டின் அரசமைப்பில் முன்னுரிமை என்றால், நாம் சமூக-பொருளாதார ஜாதி கணக்கெடுப்பை கோர வேண்டும் மற்றும் அதை பகிரங்கமாக கிடைக்கச் செய்ய வேண்டும் என ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி கருத்து.
· ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஒன்றிய அரசின் எண்ணத்தை நாட்டு நலன் கருதி மறுபரிசீலனை செய்திட வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேட்டி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை, பத்து ஆண்டுகளா னாலும் போராடுவோம் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைட் கூறியுள்ளார்.
தி டெலிகிராப்:
· ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளின் 11 பேர் கொண்ட குழு, ஒன்றிய அரசின் உள்துறை அமைச் சர் அமித் ஷாவை சந்தித்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி மனு அளித்தனர்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment