டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· நீட் தேர்வு ரத்து குறித்து ஆதரவு கோரி தமிழ் நாடு முதலமைச்சர் 12 மாநில முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு விரைவில் ஆதரவு கிடைக்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நம்பிக்கை.
தி இந்து:
· ஒரு கால பூஜை செய்திடும் கோயில்களில் பணி யாற்றும் 9860 அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத்துறை வழங்கும்.
தி டெலிகிராப்:
உயர்ஜாதி வருமானம் குறைந்தோர்க்கு ரூ.8 லட்சம் வருமான வரம்பு, ஒன்றிய அரசு அமைத்த சின்ஹோ ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் அளிக்கப் பட்டதாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்ய முடிவு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment