ஆப்கனில் கடந்த 20 ஆண்டுகளாக மாணவர்கள் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை: தலிபான் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

ஆப்கனில் கடந்த 20 ஆண்டுகளாக மாணவர்கள் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை: தலிபான் அறிவிப்பு

காபூல், அக். 7- ஆப்கானிஸ்தானில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுவரை பள்ளிக ளில், கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் படித்துப் பெற்ற பட் டத்தால் எந்தப் பயனும் இல்லை என்று தலிபான்கள் தெரிவித்து உள்ளதாக ஆப்கன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தலிபான்கள் அமைத்துள்ள இடைக்கால அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக இருக் கும் அப்துல் பாகி ஹக்கானி உள் ளூர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறு கையில்கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்கள் ஆட்சியில் இல்லாத போது, நேட்டோ, அமெரிக்கப் பாதுகாப்பின் கீழ் ஆட்சி செய்த ஹமீது கர்சாய், அஷ்ரப் கனி ஆகி யோர் ஆட்சியில் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்கள், கல்லூரி களில் படித்துப் பெற்ற பட்டத்தால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

இந்த தேசத்துக்கு பயன்படும், மதிப்புகளை உணர்ந்த மாண வர்களை, தலைமுறைகளை உரு வாக்கும் ஆசிரியர்களை பணிய மர்த்த வேண்டும். இளம் தலை முறையினரின் அறிவை ஆப்கனின் எதிர்காலத்துக்கு பயன்படுத்த வேண்டும்.

இன்றுள்ள முதுகலைப் படிப் புகள், முனைவர் பட்டங்கள் எல்லாம் மதரசாவில் படிக்கும் மதரீதியிலான படிப்புகளைவிட மதிப்புக் குறைவானவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆப்கானிஸ்தான் வர லாற்றில் கல்விக்கான பொற்கால மாகக் கருதப்படுவது கடந்த 2000 முதல் 2020ஆம் ஆண்டுகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment