மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்
கரூர்,அக்.7- கடந்த அதிமுக ஆட்சியில் மின் தேவையில் 22 சதவீதம் மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டது என மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர் வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி
தெரிவித்தார்.
கரூர் கொளந்தானூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் சேதம் அடைந்திருப்பதை பார்வையிட்ட அவர், பின்னர் அங்கு குடியிருந்தோர் பசுபதிபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் ஒருநாள் மின் தேவை 16,000 மெகாவாட். இதில் வெறும் 22 சதவீதம் மட்டுமே கடந்த அதிமுக ஆட்சியில் சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டது. மீதம் உள்ளவற்றை ஒன்றிய அரசிடம் இருந்தும், தனியாரிடம் இருந்தும் வாங்கிப் பயன் படுத்தினர். தற்போது, மின் உற்பத்திக்கு ஆகும் செலவைக் குறைத்து, அதிக விலை கொடுத்து தனியா ரிடம் இருந்து மின்சாரம் வாங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அனல் மின் உற்பத்தியை அதிகரிக்க கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒடிசாவில் இருந்து நிலக்கரி வாங்கப்படுகிறது. நிலக்கரியை வாங்கி இங்கு உற்பத்தி செய்வதற்கு பதிலாக, அங்கேயே மின் உற்பத்தி செய்து மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றார்.
நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி கிடையாது
தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் தகவல்
சென்னை, அக்.7- தேனி மாவட்டம் தேவாரம் அருகி லுள்ள பொட்டிபுரம் ஊராட்சியில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ அணு ஆராய்ச்சி தொடர்பாக 2010ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ரூ.1320 கோடி செலவில் நியூட்ரினோ திட்டம் அமைக்கப்படும் என அறிவித்தது.
இந்த மலையில் 1500 மீட்டர் ஆழத்தில், 50 டன் எடை கொண்ட உலகின் பெரிய மின்காந்தம் அமைக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தத் திட்டம் அமைப்பதற்கு தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என மதிமுக மற்றும் பூவுலகின் நண்பர்கள் ஆகியோர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. 2017 ஆம் ஆண்டு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விதித்த தீர்ப்பில், நியூட்ரினோ திட்டத்திற்கு காட்டுயிர் வாரிய அனுமதி பெறாமல் இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் 20ஆம் தேதி நியூட்ரினோ திட்டத்திற்கு காட்டுயிர் வாரிய அனுமதி கேட்டு தமிழ்நாடு வனத்துறை இடம் டாடா அணு ஆராய்ச்சி நிறுவனம் விண்ணப்பத் திருந்தது.
இந்த அனுமதி கிடைத்து விட்டால் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்ற தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
கடந்த வாரம் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயிலை சந்தித்த தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாட்டை ஒன்றிய அரசுக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த மாட்டோம் என திட்ட வட்டமாக தெரிவித்ததாக தொழில்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!
சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு
சென்னை, அக்.7- பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலையினை எண்ணெய் நிறுவ னங்கள் மாதந்தோறும் நிர்ணயிக்கின்றன.
பன்னாட்டு சந்தையின் விலைக்கேற்ப எரிபொருட் களின் விலையில் மாற்றம் செய்யப்படுகின்றன. ஒவ் வொரு மாதமும் 1ஆம் தேதி சமையல் எரிவாயு உருளை விலை நிர்ணயிக்கப்படும். ஆனால் கடந்த சில மாதங்களாக மற்ற நாட்களில் விலையேற்றம் செய்யப்படு கிறது. சமையல் எரிவாயு உருளை விற்பனையில் ஈடு பட்டு வரும் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகிய 3 நிறுவ னங்களும் கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு உருளை விலையை கடுமையாக உயர்த்தி வருகின்றன.
இந்த நிலையில் சமையல் எரிவாயு உருளை விலை நேற்று (6.10.2021) உயர்த்தப்பட்டது. 14 கிலோ எடையுள்ள வீடுகளுக்கு பயன்படுத்தும் உருளைகளின் விலை ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.900.50 ஆக இருந்த சமையல் எரிவாயு உருளை ரூ.915.50 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 3 மாதமாக ரூ.25 வீதம் சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஜனவரி மாதத்தில் இருந்து இந்த மாதம் வரை ரூ.215.50 உயர்ந் துள்ளது. ஜனவரி மாதத்தில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு உருளை ரூ.710 ஆக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் ரூ.75 கூடி ரூ.785 ஆகவும், மார்ச் மாதத்தில் ரூ.50 உயர்ந்து ரூ.835 ஆகவும் அதிகரித்தது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.10 குறைக்கப்பட்டு ரூ.825 விலைக்கு விற்கப்பட்டது. மே, ஜூன் மாதங்களில் விலை உயர்த்தப்படாமல் அதே விலையே நிர்ணயம் செய்யப் பட்டது. ஜூலை மாதத்தில் ரூ.25.50 உயர்ந்து எரிவாயு உருளை விலை ரூ.850.50 ஆக அதிகரித்தது. சென்னை யில் தற்போது சமையல் எரிவாயு உருளை விலை ரூ.915.50 ஆகவும், வணிக எரிவாயு உருளை விலை ரூ.1,876 ஆகவும் உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளை விலையை உயர்த்தி வரும் நிலையில் அதனுடைய மானியத்தை ஒன்றிய அரசு குறைத்துவிட்டது. ரூ.20 மட்டுமே மானியமாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment