அக்.30ஆம் தேதி 7ஆம்கட்ட தடுப்பூசி முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

அக்.30ஆம் தேதி 7ஆம்கட்ட தடுப்பூசி முகாம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, அக்.28  தமிழ்நாட்டில் அக்டோபர் 30 ஆம் தேதி 7ஆம்கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடெங்கும் கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடும் முழுவதும் 6 கட்டங்களாக மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

அதிலும் குறிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொண்டால் புலால் உணவு சாப்பிடக்கூடாது என வதந்தி பரவி வருவதால் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு பதிலாக சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அடுத்தக்கட்ட தடுப்பூசி முகாம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,தமிழ்நாட்டில் 7ஆம்கட்ட தடுப்பூசி முகாம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று நடத்தப்படும்.

மேலும், தமிழ்நாட்டில் 2 லட்சத்திற்கும் குறைவானவர் களுக்குத்தான் இரண்டாம் கட்ட கோவேக்சின் தடுப்பூசி போட வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment