ரஷ்யாவில் புதிதாக 36,582 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 29, 2021

ரஷ்யாவில் புதிதாக 36,582 பேருக்கு கரோனா பாதிப்பு

கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க அரசு முடிவு

மாஸ்கோ, அக். 29 ரஷ்யாவில் புதிதாக 36,582 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப் பில் முதலிடத்தில் அமெ ரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 24.53 கோடிக்கும் அதிக மானோர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் தொற் றுக்கு இதுவரை 49.81 லட்சத்துக்கும் அதிகமா னோர் உயிரிழந்துள்ள னர். கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் அந் நாட்டு சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,582 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 83,52,601 ஆக உயர்ந்துள் ளது. கரோனா தொற் றுக்கு ஒரேநாளில் மேலும் 1,123 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 33 ஆயிரத்து 898 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கரோனா தொற்றில் இருந்து 72,42,735 பேர் சிகிச்சை பெற்று குணம டைந்து வீடு திரும்பி யுள்ளனர். தற்போது 8,75,968 பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந் நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் தொடர்ந்து உயரும் கரோனா பலி எண்ணிக்கையால் கடுமையான கட்டுப்பாடு களை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள் ளது.

மாஸ்கோவில் நாளை முதல் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை ஊர டங்கு அமல்படுத்தப்படுகி றது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களும் 4 மாதங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள் ளது. ரஷ்யாவில் குளிர் காலம் தொடங்க உள் ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment