ஸ்டாக்ஹோம், அக்.7 2021 - ஆம் ஆண்டில் இயற்பி யலுக்கான நோபல் பரிசு 3 அறிவிய லாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த விரு துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் 4.10.2021 முதல் வரும் 11-ஆம் தேதி வரை அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளில் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், நடப்பு ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து நேற்று அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் ஸ்க்யூரா மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ பரிசி ஆகிய 3 அறிவியலாளர்கள் இயற்பியலுக்கான நோபல் பரிசுகளைப் பெறவுள்ளனர் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. அறிவியலாளர்கள் ஸ்க்யூரா மனாபே, கிளாஸ் ஹசில்மேன் ஆகியோர் பூமியின் வானிலையில் இயற்பியல் மாதிரிக்காகவும், புவி வெப்பமடைதலின் மாறுபாட்டை அளவிட்டு துல்லியமாக கணித்ததற்காகவும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்கோளாறு பிரச்சினை மற்றும் ஏற்ற இறக்க இடைவெளியைக் கண்டறிந்ததற்காகவும் ஜார்ஜியோ பரிசிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இயற்பியலுக்கான நோபல் பரிசுதேர்வுக் குழுவின் தலைவரான தோர்ஸ் ஹான்ஸ் ஹான்சன், வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பு ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள், காலநிலை பற்றிய நமது அறிவு ஒரு திடமான அறிவியல் அடித்தளத்தில் உள்ளது என்பதை நிரூபிக்கிறது. சிக்கலான இயற்பியல் அமைப்புகளின் பண்புகள் மற்றும் பரிணாமம் பற்றிய ஆழமான நுண்ணறிவைப் பெற நமக்கு இந்த கண்டுபிடிப்புகள் பங்களித்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வேதியியல் நோபல் பரிசு - இருவர் தேர்வு
ஸ்டாக்ஹோம்,அக்.7- வேதியியலுக்கான நோபல் பரிசுஇரு விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று (6.10.2021) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட், ஸ்காட்லாந்தை சேர்ந்த டேவிட் மெக்மில்லன் ஆகியோருக்கு இவ்வாண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தரப்பில் அறிவிக்கப்பட்டது,
இரு விஞ்ஞானிகளும் வேதியியல் மூலக்கூறு கட்டுமானத்திற்கான புதிய மற்றும் தனித்துவமான வினையூக்கி கருவியை உருவாக்கியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
வேதியியலில் இருவித வினையூக்கிகளே (உலோ கங்கள் மற்றும் நொதிகள்) உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலமாக நம்பி வந்த சூழலில், இவர்களின் இந்தக் கண்டுபிடிப்பு புதிய மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு உதவி கரமாக அமைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment